பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மா


மா = தாய், அழகு, அழைத்தல், இலக்குமி, மான், கறுப்பு, குதிரை, மிருகம், ஓர் அளவு, இடித்தமா, ஒரு மரம், கருமை, செல்வம், பெருமை, நிலம், வயல், வண்டு, வலி, மானம், மாமரம் மாகதர் = வம்ச பரம்பரை கூறிப் புகழ்பவர், பாணர், இருந்துபுகழ்பவர் மாகதி = முல்லை மாகத்தார் = தேவர் மாகந்தம் = மாமரம் மாகம் = மாசி மாதம், தேவர் உலகம், திக்கு, மேகம், ஆகாயம் மாகர் = தேவர் மாகாணி = பதினாறிலொரு பங்கு மகாத்மியம் = பெருமை மாகு = வலை, வலைமணி மாகுலவர் = வேடர் மாகூர்தல் = குளிரால் மிருகங்கள் உடல் வளைதல் மாகேயன் = நரகாசுரன் மாக்கள் = குழந்தைகள், பகுத்தறிவற்றவர், மிலேச்சர், ஐயறிவுடையவர் மாங்கிசம் = மாமிசம் மாசி = மேகம், ஒரு மாதம் மாசிகம் = மாசந்தோறுஞ் செய்யும் ஒரு கடன், மாத சம்பந்தமாகத் தோன்றுவது மாசு = அழுக்கு, அற்பம், குற்றம், மேகம் மாசுணம் = பாம்பு, பெரும்பாம்பு மாசுணி = அழுக்காடை மாசேனன் = அருகன், முருகன் மாசை - பொன், நாணயம் மாச்சரியம் = பொறாமை மாடகம் = யாழின் முறுக்காணி மாடம் = உழுந்து, வீடு மண்டபம், பெரிய வீடு மாடன் = ஒரு பேய், மடையன் மாடியம் = கவசம் மாடு = எருது, இடம், செல்வம், பக்கம், பொன் மாடை = பொன், அரைவராகன் மாட்சி = மாட்சிமை, நன்மை, பெருமை மாட்டிலையான் = பெரிய ஈ மாட்டுக்கிடை = பசுத்தொழுவம் மாட்டுக்கொட்டில் = பசுக்கொட்டில்