பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாத்து

329

மார்க்கம்


மாத்து = பெருமை, வரிசை, மகத்து, செருக்கு மாத்தல் = வருந்தல், குடித்தல், புசித்தல் மாந்தாதா = சூரிய வம்சத்தைச் சார்ந்த ஒரு பிரசித்தி பெற்ற அரசன் மாந்தி = மாமரம் மாபலன் = காற்று மாபாடியம் = பேருரை மாபெலை = பார்வதி மாப்பு = மன்னிப்பு மாமகன் = மன்மதன் மாமடி = மாமனார், மாமன் மாமல்லபுரம் = மாபலிபுரம் மாமாத்திரர் = வைத்தியர் மாமுனி = அருகன் மாமை = மேனி, துன்பம், அழகு, நிறம், கருநிறம் மாயம் = ஆச்சரியம், தீது, கறுப்பு, பொய், வஞ்சகம் மாயாபுரி = பித்தளை, அரித்துவாசம், மாயா சரிரம் மாயாவாதம் = அத்துவிதமதம் மாயூரம் = மயில் கூட்டம், மாயவரம் மாயை = காளி, பொய்யுணர்வு, மாயசக்தி, வஞ்சகம், அரித்துவாரம் 42 மாயோர் = பெண்கள் மாயோனாள் = திருவோண நட்சத்திரம் மாயோள் = துர்க்கை, கருநிறமுடையவள் மாயோன் = திருமால் மாய்மாலம் = பாசாங்கு, மோசம் மாரகம் = மரணம், அழித்தல் மாரகாகளம் = குயில் மாரன் = காமன், மன்மதன் மாாயம் = அரசன் செய்யும் சிறப்பு, உவகை, நற்செய்தி மாரி = கள், நீர், மேகம், மழை, மாரணம், காடுகிழாள் மாரிக்காலம் = ஐப்பசி கார்த்திகையின் பருவம் மாரி நாள் = உத்திரநாள் மாரீசம் = மாயம், வஞ்சகம் மாருதம் = காற்று மாருதி = அநுமன், வீமன் மாருதேயன்= அநுமன் மார்கழி = தனுர்மாதம், மிருகசீரிடம் மார்க்சகாயம் = வழித்துணை மார்க்கசிரம் = மார்கழி மாதம் மார்க்கம் = ஆராய்வு, வழி, சமயம், தெரு, முறை, ஒழுக்கம்