பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மிடிமை

332

மிழற்றல்


மிடிமை = வறுமை மிடை = துாறு, பரண் மிடைதல் = நெருங்கல், கலத்தல் மிண்டன் = திண்ணியன், திட்பமுடையவன், அறிவிலி மீண்டுதல் = நெருங்குதல்,வலியதாதல், குத்துதல் மிதப்பு = உயர்ச்சி, மேடு மிண்டு = மதம் மிதவை = பால்சோறு, தெப்பம், குழை கூழ் மிதி = அளவு, மிதித்தல்,அறிவு, கவளம் மிதிதோல் = காற்றுப்பை, துருத்தி மிதுனம் = இரட்டை, ஒர் இராசி, ஆண் பெண் மித்தியாமதி = பொய்யுணர்வு மித்தை = பொய் மித்தியை = பொய் மித்திரம் = நட்பு மிரியல் = மிளகு மிருகதரன் = சந்திரன் மிருகநாபி = கத்துாரி மிருகபதி = சிங்கம் மிருகமதம் = கத்தூரி மிருகாங்கன் = சந்திரன் மிருகாரி = சிங்கம், புலி மிருகேந்திரன் = சிங்கம் மிருடன் = சிவன் மிருடாநி = பார்வதி மிருதங்கம் = மூங்கில், முழவு, மத்தளம் மிருதசஞ்சீவினி = உயிர்தரு மருந்து மிருதம் = மரணம், யாசித்து வாங்கிய பொருள், விஷம், பிணம் மிருதபாஷினி = மென்மொழியான் மிருதி = தரும நூல், நினைவு மிருதித்தல் = இறத்தல் மிருத்திகை = மண் மிருத்தியு = இயமன், பணம், பகைவன் மிருத்தியுஞ்சயன் = சிவபெருமான் மிருத்து = மரணம், மண், எமன் மிலாறு = வளார் மிலேச்சன் = அறிவினன், சூரியன், புறநாட்டான், கீழ் மகன், ஆரியன் மிலைச்சுதல், மிலைதல் = அணிதல், சூடுதல் மிலைத்தல் = மேய்தல், மயங்குதல், நனைத்தல் மிழலை = மழலை மிழற்றல் = பேசுதல், மெல்லப் பேசுதல்