பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மிளிர்தல்

333

மீளி


மிளிர்தல் = பிறழ்தல், புரளுதல், குதித்தல், கீழ்மேலாதல், மறிதல், விளங்குதல் மிளை = காவற்காடு , காவல் மிறை = வளைவு, திறை, குற்றம், உலைவு, வருத்தம், அச்சம், கப்பம் மிறைக்கவி = சித்திரக்கவி மிறைத்தல் = துன்பப்படல், உலைதல் மினக்கெடல் = தடைப்படல் மினக்கேடு = வியர்த்தம், வினைக்கேடு மினவுதல் = உபசரித்தல்,வினவுதல் மீன் = ஒளி, மின்னல், மின்னார் = பெண்கள் மின்னெறிதல் = மின்னுதல்

மீ


மீ = ஆகாயம், உயர்ச்சி, மேன்மை, மேலிடம் மீகாமன் = மாலுமி மீகாரம் = மேலிடம் மீக்குணம் = பெருமிதம் மீக்கூர்தல் = பெருகுதல், அதிகமாதல், மேம்படல் மீக்கூறல் = புகழ்தல், மேய்ச்சல் மீக்கூற்றம் = புகழ், அதிகப்பேச்சு மீக்கூறுவோர் = புகழ்வோர் மீக்கோன் = ஏறுதல், போர்வை, பொலிவு மீசரம் = மேலானது மீசை = மேலிடம் மீச்செலவு = கர்வம், மேற்போதல், நீதி தவறிய செயல் மீட்சி = கைம்மாறு, திிருப்புகை மீது = மேல், அதிகம் மீதுரை = பல்கால் விளம்பல் மீதூரம் = மீதுார்தல், நெருங்கல், மேற்படல் மீதூர்தல் = மேல்மேல் வருதல், அடர்தல் மீத்தோல் = மேல்தோல் மீப்பு = மேம்பாடு, மிகுதி மீமாம்சை = வேதப்பொருளை உணர்த்தும் நூல் மீமிசை = மேலுக்குமேல் மீயான் = மாலுமி மீளாக்கதி = மோட்சம் மீளி = வீரன், பாலைநிலத் தலைவன், பெருமை, வலி, இளைஞன், பேய், அரசன்