பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீளிமை

334

முகவாசம்


மீளிமை = வன்மை, வீரம் மீனகேதனன் = மீன்கொடியுடைய பாண்டியன், மன்மதன் மீனமாதம் = பங்குனி மாதம் மீனாசு = சந்திரன் மீனவன் = பாண்டியன் மீனேறு = மகரமின் மீன் = சித்திரைநாள், மகரம், விண்மீன்

மு

முகக்கடுப்பு = முகக்கோபம் முகக்களை = முக அழகு முகக்கிளர்ச்சி = முகமலர்வு முகம்கொள்ளுதல் = சம்மதம் பெறுதல் முகக்கோட்டம் = முகப்பொலிவின் அழிவு, முகக்கோணல் முகங்கொடுத்தல் = இசைதல் முகஞ்செய்தல் = தோன்றுதல், முன்னாதல், நோக்குதல் முகடி = மூதேவி, மூத்தவன் முகடு = பாழ், உச்சி, வாயில் முகத்தல் = அளத்தல், விரும்பல், கொள்ளல், எடுத்தல் முகத்துவாரம் = கடலும் ஆறும் பொருந்துமிடம், வாயில் முகந்திரிதல் = முகம் கோணல் முகபடாம் = முகப்போர்வை, முகத்தில் அலங்காரமாக இடும் துணி முகம் படுதல் = முன்தோன்றுதல் முகப்பு = தலைப்பு, முகனை, முன்னிடம், முகத்தல் முகமன் = துதி, உபசாரம் முகமாதல் = உடன்படுதல், பக்குவமாதல் முகம் = முகப்பு, வாய், வதனம், வாயில், பக்குவம், ஆரம்பம், உபாயம் முகம் புகுதல் = எதிர்சென்று நிற்றல் முகரம் = காகம், கடுஞ்சொல், ஒலி, சங்கு முகரிமை = பேரறிவு, தலைமை முகவட்டு = மிருகங்களின் தலை அணி முகவரி = விலாசம் முகவாசம் = வெற்றிலை, வாசனைப்பொடி