பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முசிதல்

336

முடுவன்


முசிதல் = அறுதல், கெடுதல், கசங்குதல் முசித்தல் = களைத்தல், இளைத்தல், மெலிதல், அழிதல், திருகுதல் முசிறு = செவ்வெறும்பு, முன்கோபி முசு = குரங்கு முசுக்கட்டை = கம்பளிப்பூச்சி முசுண்டர் = கீழ் மக்கள் முசுண்டி = ஒரு போர்க் கருவி முச்சந்தி = திரிகால சந்தி, முத்தெரு கூடுமிடம் முச்சி = மயிர்முடி, தலையுச்சி முச்சுடர் = அக்னி, சூரியன், சந்திரன் முஞ்சகேசி = திருமால் முஞ்சம் = குழந்தை அணி முஞ்சல் = சாதல், முற்றல் முஞ்சி = நாணற்புல், பூணலில் கட்டும் புல் முஞ்சுதல் = சாதல், முடிதல் முடக்கம் = தடை, வளைவு முடங்கர் = மெலிவு, ஈன்றணிமை முடங்கல் = தாழை, நோய், மூங்கில், ஒலை, முடங்கல், கடிதம், மடங்கல், சிறுமை முடங்குளை = வளைந்த கழுத்து மயிருடைய சிங்கம் முடம் = நொண்டி, குற்றம், வளைவு முடலை = உண்டை, திரட்சி, பெருமை, முறுக்கு, வலி, புலால் நாற்றம், மன வண்மை முடவன் = அருணன் , சனி, கொண்டி முடி = வலை, முடிச்சு, குடுமி, உச்சி, கிரீடம், நாற்றுமுடி முடிச்சாத்து = தலைப்பாகை முடுகல் = எதிர்தல், கிட்டல், விரைதல் முடுக்கர் = மலைக் குகை, குறுந்தெரு, கோணத்தெரு, அருவழி, தெருச்சந்து முடுக்கல் = அவசரப்படுத்தல், ஓட்டல், நெருக்கல் முடுக்கு = கோணல், வலிமை முடுக்குதல் = நெருங்குதல், உட்செலுத்துதல், உழுதல், விரைதல் முடுவல் = நாய் முடுவல் படையோன் = வலியன் முடுவன் = ஊமை