பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடை

337

முதிரை


முடை = நாற்றம், தீ, புலால், தவிடு, நெருக்கடி, முடைதல் முடைநாற்றம் = புலால் நாற்றம் முட்கோல் = இருப்பு முள் முட்ட = நிறைய, முற்ற முட்டம் = காக்கை, ஊர், பக்கம் முட்டாறு = முட்கோல் முட்டி = ஈட்டிமரம், பிச்சை முட்டிகை = சிறுசுத்தி முட்டு = குறைவு, வழு, தடை, தீட்டு, வறுமை, நெருக்கம், குவியல், முழந்தாள், முட்டுதல், இடையூறு முட்டுப்பாடு = நெருக்கிடை, வருத்தம், வறுமை முட்டை = அண்டம், சிறுகாண்டி, தவிடு முட்புறக்கனி= பலாப்பழம் முணங்கு = அடக்கம், சோம்பு முணங்குதல் = அடங்குதல், மெல்லப்பேசுதல், சோம்பல் முறித்தல் முணவுதல் = வெறுத்தல், கோபித்தல் முணை = வெறுப்பு, மிகுதி முண்டகம் = கடல் முள்ளிகள், தாழை, முள், நெற்றி முண்டகன் = பிரமன் 43 முண்டகாசனை = இலக்குமி முண்டம் = உடற்குறை, குற்றி, தலை, நெற்றி முண்டி = நாவிதன் முண்டிதம் = மொட்டை முண்டு = முனைந்து எதிர்த்தல், சிறுதுணி, கணு முண்மா = முட்பன்றி முதம் = உவகை முதலி = தலைவன், பெரியோன் முதலுதல் = தோன்றுதல், தலைமையாதல், முதலாதல் முதல்நிலை = பகுதி, தலைவாயில், முதலில் நிற்பது முதல் = ஆதி, கடவுள், காரணம், இடம், வட்டிக்குக் கொடுக்கும் பணம், வியாபாரம் செய்யும் பணம் முதற்பொருள் = கடவுள், மூலதனம் முதாரி = முதுமை, முன்கை வளைபல் முதிதை = மனத்தூய்மை, பெரியோரிடம் வைக்கும் பற்று, மனத்தூய்மை முதியாள் = தேவராட்டி, மருள் வந்து ஆடுபவள் முதிரம் = குமணன் மலை முதிரை = அவரை கடலை முதலியன