பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதிர்தல்

338

முந்து நூல்


முதிர்தல் = ஒழிதல், உயர்தல், முற்படுதல், முற்றுதல் முதிர்வேனில் = ஆனி ஆடி மாத பருவம் முது = பழமை, பேரறிவு முதுகண் = முதன்மையான ஆதாரம் முதுகயம் = கடல் முதுகாடு = சுடுகாடு, இடுகாடு முதுகிடுதல் = தொற்று, முதுகு காட்டி ஓடுதல் முதுகுரவர் = பெற்றோர் முதுகுன்று = விருத்தாசலம் முதுக்குறைவு = பேரறிவு, பெண் புத்தியறிகை முதுசொல் = பழஞ்சொல் முதுபொழில் = நாவலம் தீவு, முதுநிலம் = களர் நிலம், பாலை நிலம் முதுமகன் = சனி முதுவரம் = ஆலமரம் முதுமொழி = அறிவுரை, பழஞ்சொல், பிரணவம் முதுவர் = அமைச்சர், அறிஞர், மூத்தோர் முதை = இலை உதிர்ந்தகாடு, பழங்கொல்லை முதைப்புனம் = பழங்கொல்லை முதையல் = முதிர்காடு முத்தகம் = தனிநின்று முடியுஞ் செய்யுள், எறி ஆயுதம் முத்தம் = அதரம், கொஞ்சுதல், முத்து முத்தரையர் =ஒருசெல்வர் மூவேந்தர் முத்தர் = முத்திக்குரியோர் முத்தலை = சூலம் முத்தன் = விட்டவன், பாசங்களால் விடப்பட்டவன், முத்தி பெற்றோன், முக்தன் முத்தாபலம் = முத்து முத்தாவலி = முத்துமாலை முத்து = விடுதல், மோட்சம், முக்தி முக்தி = மோட்சம், விடுபடுதல், முத்தம் முத்திநெறி = ஞானமாாக்கம் முத்துச்சிவிகை = முத்துப் பல்லக்கு முத்தை = கவளம், திரட்சி, மிகவும் தெளிவிலாள் முத்தன் = கடவுள் முத்திசினோர் = முன்னோர் முத்திரி = முந்திரிகை மரம் 1/320 அளவை உணர்த்த ஓர் எண் முத்து = முன், பொந்து முந்து நூல் = முதனூல்