பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முந்துறல்

339

முரளி


முந்துறல் = தோற்றுவித்தல், முற்படுதல் முந்தூழ் = பழவினை, மூங்கில் முந்தை = முன்னோன், பழமை, பாட்டன், முன்னே முந்நீர் = கடல் . முந்நூல் = பூணூல் முந்நூன்மார்பர் = அந்தணர் முப்பால் = அறம் பொருள் காமம் என்ற முப்பிரிவுடைய திருக்குறள் முப்புடைக்கணி = தேங்காய் முப்புள்ளி = ஆய்த எழுத்து முமுட்சு= துறவி, மோக்ஷதாகமுள்ளோன் மும்மடி = மூன்று மடங்கு முப்பொருள் = பதி, பசு, பாசம் என்னும் மூன்று பொருள்கள் மும்மரம் = உக்கிரம் மும்மீன் = மிருகசீரிடம் மும்முரம் = உக்கிரம் மும்மை = முக்காலம், முப்பிறப்பு, முறையிருக்குந் தன்மை, மூன்று, இம்மை, அம்மை, உம்மை முயக்கம் = புணர்ச்சி, பொருத்தம் முயங்கல் = தழுவுதல் முயற்கூடு = சந்திரன் முயற்கோடு = இல்லாமையை அறிவிக்கக் காட்டப்படும் ஒர் உவமைத் தொடர் முயற்று = முயற்சி முயிறு = எறும்பு முரகரி = விஷ்ணு முரசகேதனன் = தருமன் முரசம் = மத்தளம், பேரிகை முரஞ்சு = பாறை, புகை, முதிர்தல், நிரம்பல் முரஞ்சுதல் = முற்றுதல், வலிபெறுதல் முரணல் = மாறுபடல், போராடல் முரண் = மாறுபாடு, பகை,போர், வலி முரண்டு = அமையாமை, இசையாமை, மாறுபாடு முரண்படுதல் = மாறுபடுதல் முரம்பு = மேட்டு நிலம், பருக்கைக்கல் நிறைக்த நிலம், பாறை, பாலை நிலம், உப்பளம், கழி முரலல் = ஒலித்தல், கதறுதல் முரலுதல் = ஒலித்தல், பாடுதல், கதறுதல் முரலை = நருமதை நதி முரவு = சிதைவு முரவை = வரி, தவிடு முரளி= வேய்ங்குழல்