பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முரள்

340

முள்குதல்


முரள் = சிப்பி முரற்கை = தாளம்,ஒலி முராரி = திருமால் முரி = நொய், சிதைவு முரிப்பு = எருத்துத்திமில், வளைத்தல் முரிவு = நீங்குதல், முடிவு, வருத்தம், ஊழ், சுருக்குதல், ஒடித்தல் முருகியம் = குறிஞ்சிப்பறை, துடி, உடுக்கை முருகு = தேன், அகில், இளமை, எலுமிச்சை, முருங்கை, எழுச்சி, ஒரு காதணி, குமரக்கடவுள், திருமுருகாற்றுப்படை திருவிழா, வாசனை, வெறியாட்டாளன், தெய்வத் தன்மை,வேள்வி, இனிமை முருக்கு = பலாசு முருங்குதல் = அழிதல், முறிதல் முருடர் = வேடர் முருடு = வாச்சியம், மத்தளம், பெருங்குருடு, விறகு முருந்தன் = பிரசித்தன் முருந்து = சமர்த்து, இறகினடிக்குருத்து முல்லை = இருத்தல், காடுங் காடுசார்ந்த இடமும், கற்பு, முல்லைக் கொடி, வெற்றி முல்லையர் = இடையர் முழவு = பால்கறக்கும் பாத்திரம், தண்ணுமை, மத்தளம் முழா = குடமுழா முழால் = தழுவுதல் முழுதோன் = கடவுள் முழுத்தம் = முகூர்த்தம் முழுமக்கள் = அறிவிலார் முழுமுதல் = மாவடி, கடவுள் முழுவல் = விடாது தொடர்ந்த அன்பு, நீர்ப்பறவை வகை முழுவுதல் = முத்தமிடுதல் முழை = மலைக்குகை, வளை முழைஞ்சு = துளை, மலையினுட் குகை முளரி = கடைக்கொள்ளி, காடு, தாமரை, நுண்மை, நெருப்பு, விறகு, முட்செடி முளவு = முட்பன்றி முளி = வாட்டம் முளிதல் = முற்றுதல், தோய்தல், உலர்தல், கெடுதல் முளை = ஆப்பு, அங்குரம், இளமை, தண்டு, தறி, மகன், மரக்கன்று, முளை, மூங்கில், சிறிது முள்காத்தல் = குந்தி இருத்தல் முள்குதல் = முயங்குதல் உள் செல்லுதல்