பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முறச்செவியன்

341

முனீந்திரன்


முறச்செவியன் = யானை முறம் = விசாகநாள் முறி = எழுது, முறி, தளிர், துண்டு, பத்திரம் முறிகுளம் = பூராடம் முறிதல் = தளிர்த்தல், ஒடிதல், தோற்றல், குலைதல் முறிப்பு = கா்வம், மாற்று, மருந்து முறியன்= அடிமை முறுகல் = கடுமையாதல், திருகல், முதிர்தல், மீறுதல், மிகுதல், விரைதல் செருகுதல் முறுகுதல்= விரைதல், முதிர்த்தல், மிகுதல், செருக்குதல் முறுக்கல் = கோபித்தல், திரித்தல், வலித்தல் முறுக்கு = ஒரு பண்ணிகாரம், புரி, கடுமை, திரிபு, வலிப்பு முறுவலித்தல் = சிரித்தல் முறுவலிப்பு = புன்னகை முறுவல் = பல், சிரிப்பு முறை = தன்மை, நீதி, கிரமம், தரம், ஊழ், கற்பு, பழமை, புத்தகம், அடைவு முற்கம் = பயறு முற்கரம் = பெரிய தடி முற்கான்னம் = பருப்புச்சாதம் முற்குளம் = பூராடம் முற்கொளுங்கால் = பூரட்டாதி முற்பவம் = முற்பிறப்பு முற்பூண் = தாலி முற்றவை = பாட்டி, அறிஞர் சபை முற்றில் = சுளகு, சிறுமுறம், விசாகநாள் முற்றிழை = பெண் முற்றுதல் = முதிர்தல், தங்குதல், நிறைவேறுதல், முடிதல், இறத்தல், அழித்தல், சூழ்தல், தேர்தல் முற்றாட்டு = சர்வமான்யம், வரியின்றிக் கொடுத்த நிலம் முற்றை = முன்பு முனகர் = கயவர் முனகு = குற்றம் முனி = அகத்தி, தவத்தோன், புத்தன், யோகி, யானைக் கன்று, இருடி, வில் முனிதல் = கோபித்தல், வெறுத்தல், வருந்துதல் முனித்துடை = சடங்கு முனிபுங்கவன் = முனி சிரேஷ்டன் முனிமரபு = கடவுள்தன்மை முனிவு = கோபம், வெறுப்பு முனிந்திரன் = புத்தன்