பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முனை

342

மூகாத்தல்


முனை = விண்சண்டை, நுனி, பகை, பகைப்புலம, தவம், யுத்தம், முகம், போர்க்களம் முற்படுதல், வெறுத்தல் முனைதல் = போராடல், வெறுத்தல் முனைந்தோர் = பகைவர் முனைப்பதி = பாடிவீடு முனைமுகம் = போர்முகம் முனைவர் = முனிவர் முனைவன் = சிவன், பகைவன், கடவுள், புத்தன் முனைவு = வெறுப்பு, முற்படல் முன் = முற்பட்ட, பழமை, முதல், உயர்ச்சி, மனக் குறிப்பு, முன்பு முன்பன் = வலியவன் முன்பு = பழமை, முன்னிடம், வலி முன்றில் = முற்றம், முன்னிடம் முன்றுறை = துறைமுகம் முன்றோன்றல் = தமையன் முன்னணி = முற்படை முன்னணை = முதற்பிள்ளை, மாட்டுத்தொட்டி முன்னம் = குறிப்பு, மனம், முற்பொழுது, கருத்து முன்னல் = நினைத்தல், நெஞ்சு முன்னவன் = கடவுள், தமையன், முதலானவன் முன்னிடுதல் = நேரிடுதல் முன்னிலை = காரணம், முன் நிற்பது முன்னிலைப்பரவல் = கடவுளை முன்னிலைப்படுத்தித் துதித்தல் முன்னிலைப்புறமொழி = முன்னிலையாரைப் படர்க்கையில் வைத்துப் பேசுதல் முன்னிளவல் = தமையன் முன்னை = அக்காள், பழமை முன்னீடு = தலைமை முன்னீர் = கடல் முன்னுதல் = கருதுதல், அடைதல், அணுகுதல், பொருந்துதல், முற்படுதல், எதிர்ப்படுதல் முன்னோர் = பழையோர், மந்திரிகள் முன்னோன் = கடவுள்,விநாயகன் அண்ணன்

மூ

மூ = மூப்பு, மூன்று மூகம் = ஊமை, மெளனம், கீழ்மை மூகன் = ஒர் அசுரன், ஊமை, ஏழை மூகாத்தல் = பேசாதிருத்தல்