பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

343


மூகை

343</b

மூலமலம்


மூகை = ஊமை, பகைக்கூட்டம், ஈரல்குலை மூக்கம் = சீற்றம், கீழ்மை மூக்கறை = மூக்கு அறுபட்டவன் மூங்கா = கீரி மூங்கை = ஊமை மூசல் = கெடுதல், சாதல், மொய்த்தல் மூசை = மட்குகை, மட்கரு மூடம் = அறிவின்மை மூடிகம் = பெருச்சாளி மூஷிகவாகனன் = விநாயகன் மூடு = வேர், பெண்ஆடு, மூட்டுப்பூச்சி மூடை = பொதி, மூட்டை மூட்சி = மிகுதி மூட்டம் = உலைமுகம், மூடியிருப்பது மூட்டு = பொருத்து, சந்திப்பு, கடிவாளம், கோளுரை, கட்டு மூதணங்கு = காடுகாள் மூதண்டம் = அண்டமுகடு மூதரித்தல் = ஒப்புவித்தல் மூதா = தம்பலப்பூச்சி, கிழப்பசு மூதாதை = பாட்டன் மூதானந்தம் = கணவர் இறந்ததைக் கேட்டதும் இறத்தல், பேரானந்தம் மூதில் = பழங்குடி மூது = பழமை, முதுமை மூதுரை = பெரியோர் வாக்கு, நீதிமொழி மூதை = முதுகாடு மூத்திராசயம் = சிறுநீர்ப்பை மூய் = பெட்டி, மூடி மூய்தல் = மூடுதல், நிரப்புதல் மூரல் = புன்சிரிப்பு, சிரிப்பு, சோறு, பல் மூரி = துண்டம், கிழம், திமில், எருது, எருமை, சோம்பல், தெரிவு, பெருமை, வலி, முரண் மூர்த்தரம் = தலைமயிர் மூர்த்தம் = உடம்பு, தலை, சுபவேளை, வடிவுடைப்பொருள் மூர்த்தி = கடவுள், உடல், உருவம், தவவேடதாரி மூர்த்திகரம் = தெய்வீகம் மூர்த்திமகான் = சரீரமுடையவன் மூர்த்தனி = தலை மூலகந்தம் = வெட்டிவேர் மூலபலம் = அடிப்பலமாயிருக்குஞ் சேனை மூலப்பகுதி = பிரபஞ்சகாரணமான மாயை மூலமந்திரம் = பஞ்சாட்சரமந்திரம் மூலமலம் = ஆணவமலம்