பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலம்344

மெய்யன்


மூலம் 344

மூலம் = ஆதியிலுள்ளது, உரையில்லாப் பாடம், ஒரு நக்ஷத்திரம், ஒரு நோய், காரணம், கிழங்கு, தலைமை , மூலதனம், பாதம், வேர், அடி, வாயில், மூலநோய் மூலவிருள் = ஆணவ மலம் மூலாதாரம் = ஆறாதாரத்தில் ஒன்று மூலி = மூலிகை, மரம், வேருள்ளது மூலியம் = சம்பளம், விலைப்பொருள் மூவாமருந்து = அமிர்தம் மூவாமுதல் = கடவுள் மூவுலகம் = பூமி, அந்தரம், சுவர்க்கம் மூவுலகளிந்தோன் = விஷ்ணு மூவுலகுணர்ந்தோன் = அருகன், கடவுள் மூழி = கமண்டலம், யாக பாத்திரம், அகப்பை, குளம், சோறு, மத்து, பெட்டி மூழை = மத்து, அகப்பை, சோறு மூழ்த்தம் = முகூர்த்தம் மூழ்த்தல் = மூடுதல், மொய்த்தல், முதிர்தல், வளைத்தல் மூளுதல் = கூடுதல், நெருப்பு மூற்றை = மும்மடங்கு மூள்குதல் = மூளுதல் மூளிகம் = பெருச்சாளி


             மெ

மெத்துதல் = மிகுதல், அப்புதல் மெய் = உடல், உண்மை, அறிவு, பொருள், உணர்ச்சி, மெய்யெழுத்து மெய்க்காவல் = பாதுகாவல், சிறை மெய்க்காட்டு = சேனையைப் பார்வையிடுதல் மெய்த்தகை = இயற்கை அழகு, உண்மைக் கற்பு மெய்நலம் = வலி மெய்புகுகருவி = கவசம் மெய்ப்பாடு = உள்ளத்தின் நிகழ்ச்சி புறந்தார்க்கு வெளிப்படுதல் மெய்ப்பூச்சி = கலவைச்சாந்து மெய்ப்பை = சட்டை மெய்ப்பொருள் = உண்மை, கடவுள் மெய்ம்மறை = கவசம் மெய்யன் = சத்தியவாதி, மகன், முனிவன், வேதியன்