பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

345




மெய்யுணர்வு

345

மேதாவி


மெய்யுணர்வு = உண்மையை அறிதல் மெய்யுறை = சட்டை, கவசம் மெலிகோல் = கொடுங்கோல் மெல்லரி = உயர்ந்த அரிசி மெல்லியர் = மாதர், மெலிந்தவர், வறியவர், அற்ப குணமுடையவர் மெல்லியல் = பெண், மரத்திளங் கொம்பு மெல்லிலை = வெற்றிலை மென்கண்= இரக்கம் மென்கால் = தென்றல் மென்பால் = மருதநிலம் மென்பிணி = சிறுதூக்கம் மென்புலம் = மருதம் நெய்தல் நிலங்கள் மென்னி = கழுத்து

         மே

மே = மேம்பாடு மேகசாலம் = மேகக்கூட்டம் மேகதீபம் = மின் மேகநாதம் = சிறுகீரை, மேக முழக்கம் மேகநாதன் = இந்திரசித்து, வருணன் மேகப்புள் = வானம்பாடி மேகம் = நீர், குயில், ஒருவகைநோய் மேகலகன்னிகை = நருமதை மேகலை = ஓமகுண்ட வேதிகை, சிலை, நருமதை, மாதரிடையிலணியும் நுண்மாலை, அரை நாண் மேகவண்ணன் = திருமால் மேகவாகனன் = இந்திரன் மேக்கு = மேலிடம், மேலான தன்மை, ஆப்பு, மேற்கு 44 மேகாரம் = மயில் மேசகம் = இருள், மயிற்றோகை, குதிரைமயிர் மேடம் = கவசம், ஆடு, ஓர் இராசி மேடு = உயரம், பெருமை, திட்டு மேட்டி = இறுமாப்பு மேட்டிமை = தலைமை, அகந்தை, மேன்மை மேதகம் = கோமேதகம், மேன்மை மேதகவு} மேதகை} = மேம்பாடு மேதம் = கொலை, யாகம் மேதாமனு = தட்சிணாமூர்த்தி மந்திரம் மேதாவி = அறிஞன், கிளி