பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆத்துமார்த்தம்

32

ஆம்பல்


ஆத்துமார்த்தம் = ஜீவன் பிழைக்கக்காரணமானது, தன்பொருட்டு
ஆத்மலாபம் = மோட்சம்
ஆத்மா = பரம்பொருள், உயிர்
ஆநகதுந்துபி = வசுதேவன், போர்ப்பறை
ஆநகம் = முகம், தேவதாரு, ஒருவகை துந்துபி
ஆநநம் = முகம்
ஆநந்த பாஷ்யம் = ஆனந்தக் கண்ணீர்
ஆநந்தம் = சாவு, பேரின்பம், மகிழ்ச்சி
ஆநந்தன் = சிவன், விஷ்ணு, அருகன், கடவுள்
ஆநி = கேடு
ஆநியம் = நாள், பகல், பொழுது
ஆநிரை = பசுக்கூட்டம்
ஆநிலன் = வீமன், அனுமன்
ஆநிலை = பசுக்கொட்டில்
ஆந்தரியம் = உள் இருப்பது
ஆந்தோளி = ஒருவகைப் பல்லக்கு
ஆபகை = நதி
ஆணம் = கடை வீதி, கடை
ஆபம் = நீர்
ஆபீநம் = பசுமடி, இடையர் விதி
ஆபீரம் = இடையர் சேரி
ஆபீரன் = இடையன்
ஆப்தன் = நண்பன்
ஆப்திகம் = வருடம்தோறும் வருவது
ஆப்பி = சாணம்
ஆப்பு = நொய்,முளை
ஆமம் = அரிசி, பாகம் செய்யப்படாத அரிசி முதலியன
ஆமயம் = பசுக்சாணி, நோய்
ஆமலகம் = நெல்விக்கனி
ஆமலம் = பரிசுத்தம்
ஆமா = காட்டுப்பசு
ஆமாத்தியன் = மந்திரி
ஆமான் = காட்டுப்பசு
ஆமிடம் = உணவு, மாமிசம்
ஆமிரம் = மாமரம், மரம், பழம், புளிப்பு
ஆமிலம் = புளியமரம்,புளிப்பு
ஆமோதம் = மகிழ்ச்சி, நற்குணம், மிகு மணம்
ஆம் = நீர், ஈரம், அழகு
ஆம் நாயம் = ஆகமம், வேதம், பரம்பரை உபதேசம்
ஆம்பல் = இசைக் குழல், ஒரு பண், கள், குமுதம், யானை, மூங்கில், ஒரு பேர், எண், அல்லி, சந்திரன்