பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேற்றிராணி 347

மொசிதல்


மேற்றிராணி 347 மொசிதல்

மேற்றிராணி = அதிகாரம், அதிகாரி மேன = ஏழாம் வேற்றுமை உருபாகவரும் சொல் மேனகை = இந்திரலோக நடன மாதர்களுள் ஒருத்தி, மலையரையன் மனைவி மேனா = மேனகை, பல்லக்கு மேனி = அழகு, உடல், காந்தி, நிறம் மேனை = மலையரசன் மனைவி மேன்மக்கள் = பெரியோர்

மை

மை = இருள், பசுமை, அஞ்சனம், கருமை, குற்றம், மலடு, மேகம், ஆடு, பாவம், எருமை, அழுக்கு, பிறவி, மலடு, மை மைதிலி = சீதை மைதுனம் = புணர்ச்சி மைத்தல் = ஒளிகெடுதல்,கருத்தல் மைத்திராவருணன் = அகத்தியன் மைத்துராவருணி = அகத்தியன் மைத்திரி = சிநேகம் மைந்து = வலி, அழகு, வீரம், விருப்பம் மைமல் = மாலைநேரம் மைம்மா = பன்றி மைம்மீன் = சனி மைமுகன் = குரங்கு மையல் = செருக்கு, பித்தம், காம மயக்கம் மையன்மா = யானை மையா = காட்டுப்பசு மையாத்தல் = ஒளி கெடுதல், மயங்குதல் மையான் = எருமை மைவிடை = ஆட்டுக்கிடா

மொ

மொக்கணி = குதிரை உணவுப்பை மொக்கு = மரத்தின் கணு, பூ அரும்பு மொக்குள் = கொப்பூழ், நீர்க்குமிழி, அரும்பு, கொப்புளம் மொசிதல் = மொய்த்தல்