பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோடி

349

மெளவல்


மோடி = காடுகிழாள், துர்க்கை, பிணக்கு
மோடு = உயர்ச்சி, பெருமை, உடல், முகடு, மேடு, வயிறு, மடமை
மோதகம் = அப்பவருக்கம், கொழுக்கட்டை, ஒரு பணிகாரம், மகிழ்ச்சி, பிட்டு
மோதகர் = மகிழ்ச்சியுடையவர்
மோதம் = மகிழ்ச்சி, மணம்
மோதவம் = வாசனை
மோது = வைக்கோற்கட்டு, தாக்கு
மோத்தை = வெள்ளாட்டுக்கடா, விரியாதபூ
மோப்பி = கைம்பெண், விதவை
மோப்பு = காதல்,
மோய் = தாய்
மோலி = முடி
மோவாய் = தாடி
மோழல் = பன்றி
மோழை = கஞ்சி, மடமை, கொம்பில்லா மிருகம், மொட்டை, கீழ் ஆறு
மோழைமை = பரிகாசம்
மோறாத்தல் = சோம்பி இருத்தல்
மோனம் = மெளனம்
மோனர் = முனிவர், மெளனிகள்
மோனை = ஆதி, முதன்மை, பாட்டின் ஓர் அடியில் முதல் எழுத்து ஒன்றாய் இருத்தல்

மௌ




மெளசலம் = உலக்கைப் போர்
மௌட்டியம் = அறிவின்மை மயக்கம்
மௌக்திகம் = முத்து
மௌரசிகன் = மத்தளக்காரன
மெளலி - முடி, தலை
மௌவல் = முல்லை, வனமல்லிகை