பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ய = பூணூல் யக்கர் = இயக்கர் யக்கன் = குபேரன், இயக்கன் யக்யோபவிதம் = பூணுால் யக்கியம் = யாகம் யக்கேசன் = குபேரன் யச்சு = புகழ் யசந்தன் = யாகத்தலைவன் யசமானன் = யாகத்தலைவன் யசாகன் = கொடையாளி யஸ்வி = புகழாளன் யஞ்ஞபுருடன் = விஷ்ணு யஞ்ஞம் = யாகம் யஞ்ஞோபிவிதம் = பூணூல் யட்டி = ஊன்றுகோல், முத்துமாலை, மாலை யதா = எவ்வாறு யதார்த்தம் = சத்தியம் யதி = துறவி, கைப்பெண், முனி யதிராஜன் = இராமாநுஜன் யதுநாதன் = கிருஷ்ணன் யதேஷ்டம் = மிகுதி யந்திரம் = தேர், பொறி, திரிகை, செக்கு யமகம் = வந்த சொல்லே வருதல், மடக்கு என்னும் அணி யமதுாதி = பாம்பின் பற்களில் ஒன்று யமனி = இமயபுரம் யமத்ருமம் = இலவமரம் ່ யமனி = யமபுரம் யமப்பிரியம் = ஆலமரம் யமவம் = இரட்டை யயு = அசுவமேதக்குதிரை யவம் = வால்கோதுமை, நெல் யவனர் = கம்மாளர், சித்திரக்காரர், சோகனர், துருக்கர், மிலேச்சர், கிரேக்க நாட்டினர் யவனீகை = திரைச்சீலை யவாகு = கஞ்சி யவாநீ = ஓமம் யஷன் = அரக்கன், இயக்கன், அரக்கன்

யா

யா = ஒரு மரம், யாவை வகை, கட்டுதல் யாகபதி = இந்திரன் யாகம் = பலி, யாகம்