பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடிசம்

358

வட்டிகை


வடிசம் = துாண்டில்
வடிதல் = நீளுதல், வற்றுதல், திருந்துதல், உருக்கொள்ளுதல், தெளிதல்
வடித்தல் = கூர்ஆக்குதல், பிழிதல், தெளித்தெடுத்தல், தெளிதல், வசமாக்குதல், ஆராய்தல், திருத்துதல், நீளமாக்கல், பயிற்றுதல், யாழ் நரம்புகளை உருவுதல்
வடிப்பம் = செப்பம், அழகு
வடிம்பு = நுதி, விளிம்பு, பழி, தாங்குமரம்
வடிவு = அழகு
வடு = இளங்காய், குற்றம், செம்பு, தழும்பு, பிரமசாரி, குற்றம், வசை, வண்டு, மாம்பிஞ்சு, மாணவகன், உபநயனம்
வடுகன் = பிரமசாரி, வயிரவன், தெலுங்கன்
வடுகன்தாய் = காளி
வடுகு = ஒரு கூத்து, தெலுங்கு, மருதயாழ்த்திறம்
வடுத்தல் = பிஞ்சு விடுதல், வெளிப்படுத்தல்
வடுவகிர் = மாவடுவின் பிளவு
வட்கல் = கெடுதல், நாணுதல், ஒளி மழுங்கல்
வட்கர் = குற்றம், பகைவர், இடை முரிவு
வட்கார் = பகைவர்
வட்குதல் = கெடுதல், தாழ்தல், வெட்டுதல், வளம் பெறுதல்
வட்சஸ்தலம் = மார்பு
வட்டகை = சிறு கிண்ணம், பிரதேசம்
வட்டணம் = கேடகம்
வட்டணை = தாளம் போடல், வட்டம், தாளம், கேடகம், வலமிடம் சுற்றுகை
வட்டத்தோல் = கேடகம்
வட்டப்பாறை = சந்தனக்கல்
வடடம் = கேடகம், கைம்மணி, நாணயமாற்று வட்டம், சுற்று, சக்கரம், ஆலவட்டம், சந்தனக்கல், திரிகை, வளைவு, வாகு வலையம், ஆடை, மண்டலம், நீர்சால், சுழல் படை, நீர் எறிகருவி, தடவை, எல்லை
வட்டாடல் = சூதாடல், உருட்டல்
வட்டி = பலகறை, உண்கலம், கடகப்பெட்டி
வட்டிகை = கூடை, சித்திரம், ஒரு சாந்து, ஒரு விருது, பந்தயம், சித்திரக்கோல், பொருள், பரிசில், ஒருவகை ஒடம்