பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வதிதல்

360

வயவரி


வதிதல் = தங்குதல், தூங்குதல்
வதிரன் = செவிடன்
வது = மனைவி, மருகி
வதுவர் = யானைப்பாகர், குதிரைப்பாகர்
வதுவை = கலியாணம்
வது = மணப்பெண்
வதூவரர் = மணமக்கள்
வத்தம் = சோறு, நெல்
வத்தனை = செல்வம், வமிசம், சீவனம்
வத்தா = பேச்சில் வல்லவர்
வத்தித்தல் = உளதாதல்
வத்திரம் = முகம், ஆடை
வநசந்தனம் = அகில்
வந்தி = மலடி, மங்கல பாடகர், பலவந்தம், வணக்கம், புகழ்வோன்
வந்திகர் = மங்கல பாடகர்
வந்திகை = தோள் வளை
வந்தித்தல் = வணங்கல்
வந்திபாடம் = புகழ்க்கவி
வந்தியர் = மங்கல பாடகர், மலடிகள்
வந்து = காற்று
வந்தை = மலடி, மலட்டுப் பசு
வபனம் = மயிர்களைதல்
வபு = உடல்
வமிசாவளி = வமிசம், பரம்பரை அட்டவணை
வம்பமாக்கள் = புதிதாக வந்தவர்
வமனம் = வாந்தி
வம்பலர் = அயலோர், புதியோர், வழிப்போக்கர்
வம்பவுரை = புதுமொழி
வம்பு = கயிறு, நிலையின்மை, புதுமை, கச்சு, பயன் இன்மை, வாசனை, வீண், பொய், வஞ்சனை, கைச்சரடு, கச்சு, வீண்பேச்சு, பயன் இன்மை
வயக்கம் = விளக்கம், ஒளி
வயங்கல் = ஒளி செய்தல், மிகுதல்
வயணம் = வகை
வயத்தம் = தென்றல், வசந்த காலம்
வயந்தன் = மன்மதன்
வயப்புலி = சிங்கம்
வயப்புள் = கருடன்
வயப்போத்து = சிங்கம்
வயமா = புலி, குதிரை, யானை, சிங்கம்
வயம் = வசம், வன்மை, நீர், பறவை, வலிமை, வெற்றி, வேட்கை
வயவர் = வீரர், படைத் தலைவர்
வயவரி = புலி