பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வயவன்

361

வரிக்கடை


வயவன் = கணவன், வீரன், வலியோன்
வயவு = ஆசை, வலி
வயவை = வழி
வயா = வருத்தம், மசக்கை, வேட்கைப் பெருக்கம், நோய்
வயாவுதல் = விரும்பல்
வயானம் = பறவை
வயிந்தவம் = அசுத்த மாயை
வயிரம் = வச்சிராயுதம், ஒரு மணி, திண்மை, வட்டம், செற்றம்
வயிரி = பகைவன்
வயிரியர் = கூத்தர், பாணர்
வயிர் = கூர்மை, கொம்பு, கோபம், வாத்தியம், மூங்கில், ஊது கொம்பு
வயிர்த்தல் = பெருங்கோபம் கொள்ளுதல்
வயிறுவாய்த்தல் = கருப்பமாதல்
வயினதேயன் = கருடன்
வயின் = முறை, வயிறு, வீடு, பக்கம், இடம்
வரகவி = தெய்வ அருள் பெற்றுப்பாடும் புலவன்
வரணம் = மதில்
வரதம் = வரமளிப்பது, அருளல், காத்தல்
45
வரதன் = உபகாரி, சிவன், தியாகராயன், திருமால், வரம் கொடுப்பவன்
வரதை = உமாதேவி
வரநதி = கங்கை
வரப்பிரசாதம் = அருட்கொடை
வரப்புள் = வயல்
வரம் = வேண்டும் பொருள், தெய்வ ஈகை, உயர்ந்தது, மேன்மை, விருப்பம், மறைத்தல், வளைத்தல், விரும்பியது
வரம்பிகத்தல் = அளவு கடத்தல்
வரம்பு = அணை, எல்லை
வரன் = சிரேஷ்டன், கணவன், கடவுள், மேலோன்
வரன்முறை = வரலாறு
வரன்றல் = வாருதல், அணிதல்
வராகம் = பன்றி, போர்
வராங்கம் = தலை
வராடி = பலகறை
வரி = இசைப்பாட்டு, வண்டல், புலி, ஒழுங்கு, எழுத்து, தேமல், கோடு, குடியிறை, புள்ளி, நிறம், நெல், அறல், வண்டு, இரேகை
வரிக்கடை = வண்டு