பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரைப்பு

363

வலவை


வரைப்பு = எல்லை, மதில், குளம், இடம், உலகம், எழுதுதல்
வரையரமகளிர் = மலையில் இருக்கும் தெய்வப் பெண்கள்
வரையறுத்தல் = எல்லைப்படுத்தல், மதித்தல்
வரையறை = அளவு எல்லை
வரையாடு = மலையாடு
வரைவின்மாது = வேசி
வரையமிர்து = மலைபடு திரவியம்
வரைவு = அளவு, எல்லை, மணம், கூறுபாடு, நீக்கம்
வரோதயன் = வரத்தால் பிறந்தவன்
வர்ஷகாலம் = மழைக்காலம்
வர்ஷாந்தரம் = வருஷ முழுமையும்
வர்ணம் = குங்குமம்
வர்ணி = பிரமசாரி
வர்ணியம் = உபமேயம்
வர்த்தநம் = வளர்த்தல், தாபித்தல், பெருகுதல்
வர்த்தமானம் = செய்தி, நிகழ்காலம், நிகழ்வு
வர்த்தனை = செல்வம்
வர்த்தி = இரத்தினங்களின் கீழே பதிக்கும் தகடு, திரி
வர்த்தித்தல் = உளதாதல், தங்குதல், பெருகுதல்
வர்மம் = உட்பகை
வலக்காரம் = பொய், பலவந்தம், தந்திரம்
வலங்கொள்ளல் = வெற்றி அடைதல், வலம் வருதல்
வலசாரி = வலமாகச் சுற்றுதல்
வலசை = கூட்டம், இடம் விட்டு மற்றோர் இடம் போதல்
வலது = வெற்றி, சமர்த்து, வலப்பக்கம்
வலத்தல் = சொல்லல், வளைத்தல், கொழுத்தல், கட்டல், தெற்றுதல், சுற்றுதல், தொடுத்தல்
வலமன் = வலப்பக்கம்
வலம் = இடம், வலிமை, வெற்றி, வலப்பக்கம்
வலம்புரி = நந்தியா வட்டம், வலப்பக்கம் சுழிந்த சிறந்த சங்கு, சங்கு வடிவான தலைநகை
வலயம் = வட்டம், பூமி, கைவளை, பாத்தி, தோட்டம், கடல், சுற்றிடம்
வலவன் = சமர்த்தன், தேர்ப்பாகன்
வலவை = இடாகினி, வல்லவள், வெட்கம் இல்லாதவன், வஞ்சகப் பெண், வல்லவன்