பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வலன்

364

வல்லே


வலன் = வெற்றி, வலி, ஓர் அசுரன்
வலாரி = வலனை அழித்த இந்திரன்
வலி = நோய், வல்லமை, ஒலி, வஞ்சம், சபதம், இழுத்தல்
வலிதல் = முயலுதல், மீறுதல், அழுந்துதல், திண்ணியதாதல்
வலித்தல் = நினைத்தல், கடினமாதல், படகைத் தூண்டுதல், சொல்லல், தோற்றுவித்தல், துணிதல், வளைத்தல், கொழுத்தல், இழுத்தல், உடன்படல், வற்புறுத்தல்
வலிந்துகோடல் = அருமையில் கருத்துக் கொள்ளல்
வலிமுகம் = குரங்கு
வலியன் = கரிக்குருவி
வலிமுகம் = குரங்கு
வலையர் = கடற்கரை மக்கள்
வல் = விரைவு, சூதாடு கருவி, மேடு, திறமை, வலி, கச்சு
வல்சி = சோறு, உணவு, நெல், அரிசி
வல்லகி = வீணை, தளிர், பூங்கொத்து
வல்லணங்கு = காளி
வல்லடி = கொடுமை, பலவந்தம்
வல்லபம் = உத்தமக்குதிரை, அருஞ்செயல், கொடுஞ்செயல், வல்லமை
வல்லபன் = நாயகன், வல்லோன்
வல்லபை = அன்புள்ள நாயகி, கணபதி சத்திமாருள் ஒருத்தி
வல்லயம் = ஈட்டி
வல்லரி = தளிர், பூங்கொத்து
வல்லவன் = இடையன், உணவு சமைப்பவன், வீமன், கணவன்
வல்லவாட்டு = உத்தரீயம்
வல்லலி = மனைவி
வல்லாட்டு = குறும்பு
வல்லாமை = இயலாமை
வல்லி = பூமி, பெண், பிரிதல், படர் கொடி, அகஇதழ்
வல்லியம் = புலி, கொல்லிமலை, இடைச்சேரி
வல்லுநர் = வல்லோர்
வல்லுரம் = காடு, பூங்கொத்து, வயல்
வல்லுளி = பன்றி
வல்லூகம் = கரடி, ஆண்குரங்கு
வல்லூரம் = உலர்ந்த மாமிசம்
வல்லே = விரைவாக