பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வழுதி

366

வள்


  
வழுதி = பாண்டியன்
வழுது = பொய், வைக்கோல்
வழுதுணை = கத்தரி, கண்டங் கத்தரி
வழுத்தால் = இறந்துபோதல்
வழுத்தல் = துதித்தல், சொல்லல், வாழ்த்தல்
வழுநீர் = பீளை
வழும்பு = நிணம், குற்றம், அழுக்கு, தீங்கு
வழுவாமை = தவறாமை
வழுவாய் = பாவம் தப்புகை
வழுவை = யானை
வழுஉ = குற்றம்
வழை = சுரபுன்னை, புதுமை, இளமை
வளகு = இலை, ஒரு வகைச்செடி
வளப்பம் = கொழுப்பு, மாட்சிமை, வளமை
வளமை = செல்வப்பொலிவு, மாட்சிமை
வளமையர் = வேளாளர்
வளம் = அழகு, செல்வம், செழுமை, மாட்சிமை, வலி, வருவாய், நன்மை, தகுதி, கொழுப்பு
வளர்த்துதல் = தூங்கச்செய்தல், கிடத்துதல்
வளவல் = கலத்தல்
வளவன் = சோழன், வேளாளன்
வளவு = தோட்டம், வளைவு
வளா = பரப்பு
வளாகம் = இடம், தினைப்புனம், உலகம், பரப்பு, தேசம்
வளார் = இளங் கொம்பு
வளாவுதல் = சூழ்தல், மூடுதல், கலத்தல், அளவளாவுதல்
வளி = காற்று, உடல், வாதம்
வளிசம் = துாண்டில்
வளிமறை = கதவு
வளை = சக்கரம், சங்கு, கைவளை, புற்று, கங்கணம், சாமரை, குவளை
வளைபோழ்நர் = சங்கறுப்போர்
வளைப்பு = காவல், தடை, மதில், வளைத்தல்
வளையம் = கைவளை, வட்டம், தாமரைச்சுருள்
வள் = கூர்மை, காது, வலி, வார், பெருமை, கடிவாளம், படுக்கை, வலிமை, ஒர் ஒலிக்குறிப்பு, பற்றிரும்பு