பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்வு

367

வற்றம்


  
வள்வு = வார்
வள்ளம் = மரக்கலம், படகு, ஓர் அளவு, ஒரு வட்டில், தொன்னை
வள்ளல் = தனக்கெனவையாது இல்லையென்னாது கொடுக்கும் கொடையாளி, சிரேட்டன், பாம்பு
வள்ளன்மை = கொடையுடைமை
வள்ளி = ஆபரணம், படர் கொடி, சந்திரன், வள்ளியம்மையார், கைவளை, குறிஞ்சிப்பெண்
வள்ளித்தண்டை = பிரம்புக் கேடயம்
வள்ளியோன் = வள்ளல்
வள்ளுரம் = பசுந்தசை
வள்ளுவன் = நிமித்திகன், பறையடித்துச் செய்தி உரைப்பவன்
வள்ளை = உலக்கைப்பாட்டு, ஒருவகைத் தாவரம், நெற்குத்துப்பாட்டு
வறங்கூர்தல் = மழை பெய்யாமல் போதல்
வறட்சுண்டி = ஆடு தின்னாப் பாளை
வறப்பு = வறுமை, வற்றுதல்
வறம் = நீர் இன்மை , வறுமை, வெம்மை, பஞ்சம், வற்றுகை
வறல் = வறுமை, உலர்தல்
வறளி = உலர்ந்தசாணி
வறன் = பஞ்சம், வறுநிலம்
வறிஞர் = தரித்திரர்
வறிது = அறியாமை, சிறிது, உள்ளீடற்றது, வீணானது, அற்பம்
வறு = குற்றம்
வறுங்கோட்டி = அறிவிலார் கூட்டம்
வறை = பொரிக்கறி
வற்கடம் = பஞ்சகாலம், வறட்சி
வற்கம் = மரவுரி, கடிவாளம்
வற்கரி = கரகம்
வற்கலம் = மரப்பட்டை, மரவுரி
வற்கலை = மரவுரி, காவித்துணி
வற்காலி = வெள்ளாடு
வற்கு = அழகு, ஆடு, சந்தனம்
வற்சம் = குழந்தை, பசுக்கன்று
வற்சரம் = வருடம்
வற்சலம் = தயை
வற்சலை = ஈன்ற பசு
வற்பம் = வன்மை, பஞசம்
வற்பு = உறுதி, வலி
வற்புலம் = மேட்டு நிலம்
வற்றம் = வறுமை, கடல் நீர்வடிகை