பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வற்று

368

வக்ஷம்


வற்று = வன்மையுடையது, கூடியது
வனசம் = தாமரை
வனசரம் = யானை, காட்டுமிருகம்
வனசரர் = வேடர்
வனப்பு = அழகு
வனமாலி = திருமால்
வனம் = அழகு, காடு, ஊர்ச் சோலை, சுடுகாடு, துளசி, நீர், மிகுதி, காடு படுபொருள்
வனாந்தரம் = மனித சஞ்சாரம் அற்ற காடு
வனருகம் = தாமரை
வனிதை = பெண்
வனைதல் = அலங்கரித்தல், செய்தல், உருவமைத்தல்
வன்கணம் = வல்லின எழுத்துக்கள்
வன்கண் = கொடுமை, வீரம், அசைவின்மை
வன்பால் = குழிஞ்சி, பாலை, மேடு
வன்பு = வலிமை, பொல்லாங்கு
வன்புலம் = முல்லைநிலம்
வன்புறை = வற்புறுத்தல்
வன்பொறை = கடும்பாரம்
வன்மம் = வைராக்கியம், தீராப்பகை, வலிமை
வன்மான் = சிங்கம்
வன்மீகம் = புற்று, கரையான்
வன்மீனம் = முதலை
வன்மீன் = முதலை
வன்மை = கருத்து, வலிமை, வல்லின எழுத்துக்கள்
வன்மொழி = கடுஞ்சொல் உறுதிப்பேச்சு
வன்றி = பன்றி
வன்னம் = எழுத்து,சித்திரம், நிறம், அழகு, வர்ணம்
வன்னி - கிளி, தீ, பிரமசாரி, குதிரை
வன்னிகை = எழுதுகோல்
வன்னிசகாயன் = காற்று
வன்னியர் = காட்டில் வசிப்பவர், சேனாதிபதிகள், சிற்றரசர், நாய்க்கன்மார்
வக்ஷம் = மரபு