பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாமன்

371

வாரணன்


வாமன் = காமன், அருகன்,சிவன்
வாமான் = குதிரை
வாமி = பார்வதி, துர்க்கை
வாயசம் = காக்கை
வாயடை = உணவு
வாயிலோர் = வாயில் காப்பவர், தமிழ்க் கூத்தர்
வாயில் = ஐம்பொறி துவாரம், உபாயம், காரணம், தூது, வழி, கூட்டுவார், இடம், பொறி புலன்கள், வரலாறு, நுழைவாசல்
வாயில்விழைச்சு = உமிழ்நீர்
வாயிற்காட்சி = ஐம்பொறிகளாற் காணல்
வாயுகுமாரன் = அனுமன், வீமன்
வாயுசகன் = தீ வாயுசுதன் = வீமன், அனுமன்
வாயுதாரணை= வாயுவை நிறுத்தல்
வாயுத்தம்பம் = வாயுவை நிறுத்தல்
வாயுமூலை = வடமேற்கு
வாயுறை = மெய் உபதேசம், கவளம், மருந்து, மகளிர் காதணி, உணவு
வாய்= இடம், வடு, உண்மை வாக்கு, துவாரம், வாயில், விளிம்பு, மூலம் நுனி
வாய்க்கால் = மகநாள்
வாய்தல் = சித்தித்தல், பெறுதல், வாசல்
வாய்த்தலை = தொடங்குமிடம், தலைமதகு
வாய்த்தல் = மாட்சிமை, சேர்தல், நன்கு அமைத்தல்
வாய்ப்பு = பேறு, மாட்சிமை, அனுகூலம், சிறப்பு, அழகு, செல்வம்
வாய்ப்புள் = நற்சகுனம், குறி, வாய்ச்சகுனம்
வாய்ப்பூசுதல் = வாய்கழுவல்
வாய்ப்பகை = பொய்,கொள், வன்சொல், பயனில் சொல் முதலியன
வாய்பாடு = குறியீடு, மரபுச் சொல்
வாய்மலர்தல் = சொல்லுதல், பேசுதல்
வாய்மை = உண்மை
வாய்மொழி= உண்மை
வாய்வது = உண்மை
வாய்வழங்கல் = பேசல்
வாய்விடல் = பேசல்
வாய்விடு = வஞ்சினம், ஆரவாரம்
வாரணம் = சேவல், யானை, கடல், கவசம், பன்றி, மறைப்பு, சங்கு, தடை
வாரணன் = கணபதி