பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாரணாசி

372

வாலிசன்


வாரணாசி = காசி
வாரணை = தடை
வாரநாரி = தாசி
வாரம் = அன்பு, ஏழுகிழமைகள் கொண்டகாலம், குடியிறை, பக்கம், பட்சபாதம், தடை, கடல், நீர்க் கரை, வரம்பு, சொல்லொழுக்கு, இசையொழுக் குடையபாட்டு, தெய்வப் பாடல், யாகபத்திரம், பின்பாட்டு, பங்கு, துவாரம், மாசூற்பங்கு, மலைச் சாரம், தரம்
வாரல் = அள்ளுதல், ஒலை முதலியன வாருதல், கொள்ளையிடல், கோலுதல், தடவுதல், நீளல், முகத்தல், வடிதல், மயிர் கோதல்
வாரவாணம் = கவசம்
வாரணசி = காசி
வாரி = கடல், கதவு, நீர், மடை, மதில், மதிற்சுற்று, மிகுதி, வருவாய், யானை கட்டும் சாலை, யானை படுகுழி, விளைவு, வெள்ளம், செண்டுவெளி, வருவாய், விளைவு, வழி யானை பிடிக்கும் இடம்
வாரிசம் = தாமரை சங்கு
வாரிதம் = மேகம், தடை
வாரிதி = கடல்
வாரித்தல் = தடுத்தல், ஆணையிட்டுக்கூறல், நடத்துதல்
வாரியர் = குதிரைப்பாகர்
வாருகோல் = துடைப்பம்
வாருணம் = கடல், மேற்கு, வருணன்
வாருணி = மேற்கு, அகத்தியன்
வாருண்டம் = எண்கால் பறவை
வாரை = மூங்கில்
வார் = கச்சு, நீர், நீளம், கயிறு, வசை, தோல் வார்
வார்க்குத்து = நீர்சுழித்து ஓடும் இடம்
வார்தல் = ஒழுகுதல், நீளுதல், உரிதல், வீணையைத் தடவல்
வார்த்தகம் = விருத்தர் கூட்டம்
வார்த்திகம் = விருத்தியுரை, கிழத்தன்மை
வாலதி - வால், யானை வால்
வாலம் = வால்
வாலவாயம் = வைடூரியம்
வாலவியசனம் = சாமரை
வாலறிவன் = கடவுள்
வாலறிவு = தூய அறிவு, பேர் அறிவு
வாலாமை = தீட்டு, அசுத்தம்
வாலிசன் = குழந்தை, அறிவீனன்