பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விசேடியம்

376

விடருகம்


  
விசேடியம் = விசேடிக்கப்படுவது
விசை = எந்திரம், பக்கம், விரைவு, முறை, வெற்றி
விசைத்தல் = வீசுதல், துள்ளல், சிதறுதல்
விச்சிராமம் = ஒய்வு, செயல்முடிவு
விச்சிருப்பணம் = விரிதல்
விக்சின்னம் = பிளவு
விச்சு = வித்து
விச்சுவகன்மன் = தேவதர்சன்
விச்சுவம் = உலகம், முழுமையும்
விச்சை = கல்வி, தெரு, மந்திரம், அறிவு, வித்தை
விஞ்சுதல் = மேலாதல், மிகுதல்
விஞ்சை = கலை, வித்தை, மந்திரம்
விஞ்சையர் = புலவர், வித்தியாதரர்
விஞ்ஞாதம் = மேலான அறிவு, அறியப்பட்டது
விஞ்ஞாபனம் = அறிவித்தல், விண்ணப்பம்
விஞ்ஞானகலர் - ஒரு மலமுடையவர், ஆணவ மலமுடையவர்
விஞ்ஞானம் = விசேடமான அறிவு, உண்மை அறிவு
விடகாரி = விஷவைத்தியன்
விடக்கு = ஊன்
விடங்கம் = அழகு, ஆண்மை, கொடுங்கை, முகடு, இயற்கை லிங்கம்,
நல்லுருவம், வீதிக்கொடி
விடங்கர் = முதலை, சிறு வழி, தியாகராஜர்
விடங்கன் = காமுகன், சுயம்பு முர்த்தி, வம்பன்
விடங்கு = அழகு, அணி
விடதரம் = பாம்பு
விடதரன் = சிவன்
விடபம் = எருது, தளிர், மரக்கொம்பு, தூண், விருஷபம்
விடபி = ஆலமரம், மரம்
விடமம் = விஷமம், சமமின்மை, தொந்தரவு, வருத்தம், அழுத்தம், இன்மை, குறும்பு
விடம் = நஞ்சு, நீர்
விடம்பம் = வேடம் பூணல்
விடம்பு = உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்றாயிருத்தல்
விடயம் = அறியப்படுவது, காணப்பட்டது, தேசம், பொருள், பயன்
விடயி = ஐம்பொறி, அரசன்
விடரகம் = குகை
விடருகம் - பூனை