பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடர்

377

விண்டாண்டு




  
விடர் = நிலப்பிளப்பு, குகை, பெருச்சாளி, மலைப்பிளப்பு
விடலி = தூர்த்த மங்கை, காமுகி
விடலை = காளைவீரன், திண்ணியன்
விடல் = குற்றம், விடுதல்
விடவி = மரம்
விடன் = தூர்த்தன், சோரநாயகன், காமுகன்
விடாணம் = விலங்கின் கொம்பு
விடாணி = கொம்புள்ளது, யானை
விடாதம் = மனத்தளர்ச்சி
விடாய் = தாகம்
விடாலம் = பூனை
விடியல் = விடியற்காலம், வெளி
விடுகாலி = கட்டாத மாடு, காமுகன்
விடுதல் = பிரிதல், ஒழிதல், விள்ளுதல், தாங்குதல்
விடுதி = தங்குமிடம்
விடுதோல் = மேல்தோல்
விடை = உத்தரம், மிகுதி, விடுதல், இளமை, இடபம், கடா,எருது, ஆண்
48
விடைத்தல் = வேறுபடுத்தல், சீறுதல், தாக்கல், மிகுதல், தடுத்தல், பிரித்தல், வருந்துதல், கோபித்தல், குற்றப்படுதல்
விடைப்பு = வேறுபாடு
விடையேறி = சிவபிரான்
விட்சேபம் = கலக்கம், பயம், எறிதல்
விட்டம் = உத்திரம், வட்டக் குறுக்களவு, தேகம்
விட்டரம் = ஆசனம், தவத்தோர் பீடம்
விட்டவர் = பகைவர், துறவோர்
விட்டிசைத்தல் = பிரிந்திசைத்தல்
விஷ்டித்தல் = மலம் கழித்தல்
விட்டில் = வெட்டுக்கிளி
விட்டுணு = திருமால், வியாபகன்
விட்டேறு = வேல், இகழ்ச்சி மொழி
விட்டை = இலத்தி, மலம்
விண் = ஆகாயம், தேவலோகம்
விண்டலம் = ஆகாயம்
விண்டல் = மூங்கில்
விண்டாண்டு = ஊஞ்சல்