பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விதிர்விதிர்த்தல்

379

விநியோகம்




  
விதிர்விதிர்த்தல் = நடுநடுங்குதல்
விது = பிரமன், சந்திரன், குபேரன், வாயு
விதுடி = கற்றவள்
விதுப்பு = நடுக்கம், விரைவு
விதும்பல் = மனமசைதல், நடுங்குதல்
விதும்புதல் = விரைதல், ஆசைப்படுதல், நடுங்குதல்
விதுரன் = அறிஞன்
விதுலன் = ஒப்பில்லாதவன்
விதுவிதுப்பு = நடுக்கம், குத்துநோய், ஆசை
விதுரஜம் = வைடூர்யம்
விதேகம் = தேக விமோகனம், மிதிலை
விதேகை = மிதிலை நகரம்
விதேசம் = பிறதேசம்
விதேயன் = சொற்படிகேட்பவன்
விதை = அறிவு, புத்தி, விதை
வித்தகம் = சின்முத்திரை, ஞானம, சாதுரியம், சிறந்த கைத்தொழில், அதிசயம்
வித்தகர் = அறிஞர், கம்மாளர், தூதர், சாதுரியர்
வித்தம் = பழிப்பு, அறிவு, பொன், சூதாட்டம், அதிசயம், கூட்டம், ஞானம்
வித்தல் = பரப்புதல்
வித்தாரம் = பரப்பு, விற்பன்னம்
வித்தியாதானம் = படிப்பித்தல்
வித்தியார்த்தி = கற்போன்
வித்தியாநுபாலனம் = படிப்பித்தல்
வித்து = விதை, காரணம், அறிஞன், அறிதல்
வித்துதல் = பரப்புதல், விதைத்தல்
வித்துத்து = மின்னல்
வித்துரு = பவளம்
வித்துருமம் = பவளம்
வித்துவேடம் = விரோதம்
வித்தேசன் = குபேரன்
வித்தை = கல்வி, தந்திரத் தொழில், உண்மை, உணர்வு
விநயம் = மரியாதை, வணக்கம், நயமொழி, ஒழுக்கம்
விநாசம் = அழிவு, காணப்படாமை, அழித்தல்
விநாயகன் = விக்கிநேசுவரன், கருடன்
விநிமயம் = பண்டமாற்று
விநியோகம் = பிரிதல், விடுதல், உபயோகம், செலவு செய்தல், பிரித்துக் கொடுத்தல்