பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வியாசம்

382

விராகம்


  
வியாசம் = பொய், சாக்கு, விரிவு, கட்டுரை
வியாதன் = வியாசன், வேடன்
வியாத்தி = வியாபித்தல்
வியாபகத்துவம் = நிறைந்திருத்தல்
வியாபகம் = வியாசிப்பது, பரவுந்தன்மை
வியாபாரம் = தொழில், வணிகர், முயற்சி
வியாபி = எங்கும் நிறைந்தவன்
வியாழம் = தேவகுரு
வியாழன் = தேவகுரு
வியாளம் = துஷ்டயானை, பாம்பு
வியானன் = சரீரமுழுதும் வியாபித்திருக்கும் வாயு
வியுற்பத்தி= சொல்லின் பொருளை உணரும் வன்மை, விசேட உற்பத்தி
வியூகம் = உடல், கூட்டம், படை வகுப்பு, தர்க்கம், நிர்மித்தல்
வியோகம் = பிரிதல், சாவு
வியோமகேசன் = சிவன்
வியோமசாரி = தேவன், பட்சி
வியோமததூமம் = மேகம்
வியோமம் = ஆகாயம், நீர்
விரகம் = காமநோய், பிரிவு
விரகன் = வல்லவன், அறிஞன்
விரகு = உபாயம், சமர்த்து, உற்சாகம், பண்ணியாரம், புத்தி, கபடம்
விரக்தன் = பற்றற்றவன்
விரக்தி = வைராக்கியம்
விரசம் = சுவைகேடு, வெறுப்பு
விரசுதல் = நெருங்குதல், பொருந்துதல், செறிதல்
விரசை = மாட்டுத் தொழுவம், தருப்பை
விரணம் = புண், காயம், பகைமை
விரதம் = நோன்பு, தவம், நியமம், அருவருப்பு, ஒழிகை
விரதி = தவமுடையவன், யாகஞ் செய்பவன்
விரத்தி = துறவி
விரலேறு = ஒருவகைத் தோற்கருவி
விரவலர் = பகைவர்
விரவல் = கலத்தல்
விரவார் = பகைவர்
விரவுப்பெயர் = பொதுப்பெயர்
விரளம் = அவகாசம், இடைவெளி, விசாலம்
விராகம் = விருப்பின்மை