பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வில்லுவம்

385

விளர்




  
வில்லுவம் = வில்வமரம்
வில்லேருழவர் = வில்வீரர், பாலைநிலத்தார், வேடர்
வில்லேப்பாடு = அம்பு விழும் எல்லை
விவகாரம் = வழக்கு
விவசாயம் = முயற்சி, பயிர்த்தொழில், வேளாண்மை
விவச்சுவான் = சூரியன்
விவத்தை = நன்னிலை, ஏற்பாடு, ஒழுங்குமுறை
விவரணம் = விவரம், வியாக்கியானம்
விவரம் = துளை, பிரிவு, வகை
விவர்த்தனம் = விபரீத உணர்வு, திரும்புதல், வளர்தல்
விவிதம் = பலவிதம்
விழல் = வீண், ஒருபுல்
விழவு = திருவிழா, மிதுனராசி, அகங்காரம்
விழா = கொண்டாட்டம், உற்சவம்
விழாவணி = விழாச்சிறப்பு, வீரர் போர்க்கோலம்
விழி = கண்மணி, கண்
விழிப்பு = எச்சரிக்கை
விழுக்காடு = குறைவு, வீதம், விழுதல், வேறுபாடு, பொருளின்றிக் கூட்டும் சொல்
49
விழுக்கு = நிணம்
விழுதல் = சாதல்
விழுது = வெண்ணெய், ஆல்விழுது
விழுப்பம் = ஆசை, சிறப்பு, நன்மை, மேன்மை, உயர்வு
விழுப்பகை = பெரும்பகை
விழுப்பு = தீட்டு, அநாசாரம், நீக்கக்கூடியது, அசுத்தம்
விழுப்பொருள் = மேன்மையான பொருள்
விழுமம் = சிறப்பு, சீர்மை, நன்மை, துக்கம், வருத்தம்
விழுமியோர் = பெரியோர்
விழைச்சு = இளைமை, புணர்ச்சி
விழைதல் = ஆசைப்படல், ஒத்தல்
விழைந்தோர் = கணவர், விரும்பினோர்
விழைவு = ஆசைப்பெருக்கம், கலத்தல்
விளக்குமாறு = துடைப்பம்
விளம்பம் = தாமதம்
விளம்பல் = சொல்லல்
விளம்பனம் = தாமதம்
விளம்பி = கள்
விளரி = இரங்கல் பண், யாழ்
விளர் = இளமை, கொழுப்பு, நிணம், வெண்மை