பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளர்தல்

386

வினை


  
விளர்தல் = வெளுத்தல், முதிராதிருத்தல்
விளர்த்தல் = வெளுத்தல், வெட்குதல்
விளர்ப்பு = வெளுப்பு
விளவு = வெடிப்பு, வேறு படல், விளாமரம்
விளா = விளாமரம்
விளாகம் = போர்க்களம், சூழ் இடம்
விளாக்கைத்தல் = உழுதல்
விளாவல் = உழுதல், கலத்தல்
விளி = இசைப்பாட்டு, அழைப்பு, ஓசை, கூப்பிடு, கொக்கரிப்பு
விளிதல் = சாதல், கெடுதல், சொல்லுதல், பாடுதல், கூப்பிடுதல், நாணமடைதல், குறைதல், கழிதல், கோபித்தல்
விளித்தல் = அழைத்தல், சொல்லுதல், அழித்தல், பேரிரைச்சல் இடுதல்
விளிம்பு = கரை, அருகு, ஓரம்
விளிவு = சாவு, கேடு, தூக்கம், வெட்கம், பேரொலி
விளைஞர் = மருதநில மக்கள்
விளையுள் = வயல், விளைதல், முதிர்கை
விளைவு = பயன், சம்பவித்தல், தான்யம், ஆக்கம், முதுமை, கருத்தோற்றம்
விள் = பேசுதல்
விள்ளல் = தழுவல், திறத்தல், பேசுதல், மலர்தல், விடுதல், மாறுபடுதல்
விறத்தல் = வெற்றிபெறுதல், மிகுதல், செறிதல், அஞ்சுதல்
விறப்பு = அச்சம், பெருக்கம், செறிவு
விறலி = பாடும் மகள், மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடுபவள்
விறல் = பெருமை, வலி, வெற்றி, வீரம், மிகுதி
விற்கிடை = வில்கிடக்கும் தூரம், நான்கு முழ அளவு
விற்படை = அம்பு
விற்பத்தி = சொற்குரிய வேர்ப்பொருள், புலமை, கல்வி வன்மை
விற்பன்னர் = புலவர்
வினயம் = வணக்கம், சூழ்ச்சி, கொடுஞ்செயல், அடக்கம்
வினவல் = அளவளாவுதல், கேட்டல்
வினா = கேள்வி, சொல்
வினை = கருத்து, செயல், ஏவல், பரிகாரச் செயல், போர், நல்வினை, தீவினை, முயற்சி, தந்திரம்