பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆவலித்தல்

36

ஆறெழுத்து


ஆவலித்தல் = ஆசைப்படுதல், புலம்பல்
ஆவாகனம் = அழைத்தல், ஸ்தாபனம்
ஆவி = உயிர், குளம், பிட்டு, புகை, பெருமூச்சு, மணம், வலி, உயிர் எழுத்து
ஆவிகை = பற்றுக்கோடு
ஆவித்தல் = பெருமூச்சு விடுதல், புகைத்தல், கொட்டாவி விடுதல்
ஆவியம் = வேளாளர், வேடர்
ஆவிருதி = ஆணவமலம்
ஆவிர்ப்பவித்தல் = உண்டாதல், தோற்றுதல்
ஆவுடையாள் = சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம்
ஆவுதி = யாகம்
ஆவுரிஞ்சி = பசு தன் தினவு போக உராய்தற்கு நிறுத்தப்பட்ட தூண்
ஆவேசம் = பேய், வெறி, உட்புகுதல், கோபம்
ஆவேதனம் = அறிக்கை
ஆவேறு = இரடபம்
ஆழல் = கறையான்
ஆழாத்தல் = ஈடுபடுதல்
ஆழாரம் = வட்டமான புதைகுழி
ஆழி = மோதிரம், கடல், சக்கரம், தேர், கடற்கரை, வட்டம், கட்டளை, உருளை, கணவனைப்பிரிந்த மனைவி இழைக்கும் கூடல் சுழி
ஆழியான் = விஷ்ணு
ஆழ்தல் = வருந்துதல், மூழ்குதல்
ஆழ்வார் = பக்தியில் அழுந்துவார், கருடன், திருமால், அடியார்
ஆளரி = நரசிம்மன்
ஆளானம் = யானை கட்டும் தறி, தூண்
ஆளி = சிங்கம், யாளி
ஆளோலை = அடிமைச்சீட்டு
ஆள்வினை = முயற்சி, உற்சாகம், பணிவிடை
ஆறலை = வழிபறி கொள்ளை, ஆறுதல், அலைதல்
ஆறியகற்பு = அமைதியான கற்பு
ஆறு = வழி, சமயம், விதம், தன்மை, நதி, ஒழுக்கம், ஒர் எண், பக்கம், நிலை, உபாயம்
ஆறு கட்டி = பண்டாரங்கள் அணியும் காதணி
ஆறெழுத்து = சடாட்சர மந்திரம், (ஓம் குகாய நம) பிரணவத்தோடு கூடிய பஞ்சாட்சர மந்திரம் (ஓம் நமசிவாய)