பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினைஞர்

387

வீதம்


  
வினைஞர் = வேளாளர், செயலாளர்
வினைமுதல் = கருத்தா
வினையம் = செயல்
வினையிலி = கடவுள்
வினையுரைப்போர் = தூதுவர்
வின்னாண் = வில்லில் பூட்டும் கயிறு
விஷமம் = வன்மம், துஷ்டச் செயல்
விஷயம் = சிறப்பியல்பு
விக்ஷேபம் = கலக்கம், வீசுதல், திரிபு
 

வீ


வீ = பறவை, பூ, நீக்கம், கேடு, ஒழிவு, மரணம், அழிவு
வீகம் = மோதிரம்
வீக்கம் = பெருமை, கட்டு, பருமை, மிகுதல்
வீக்கு = கட்டு
வீக்குதல் = அழித்தல், கட்டுதல், அடக்குதல், முறுக்குதல், நிறைத்தல், வேகமுறச் செய்தல்
வீங்குதல் = பூரித்தல், ஏக்கம் கொள்ளுதல்
வீசம் = 1/16 வித்து, முளை, காரணம், மாகாணி, பங்கு
வீசல் = ஈதல், எறிதல், சிதறுதல்
வீசனம் = சிற்றால வட்டம், விசிறி
வீசி = அலை, சுகம், அற்பம்
வீசிமாலி = சமுத்திரம்
வீசை = மீசை
வீடல் = சாதல், விடுதல்
வீடாரம் = பாசறை
வீடி = தாம்பூலம்
வீடிகை = தாம்பூலம்
வீடு = மோட்சம், முடிவு, வீடு, விடல், வினைநீக்கம்
வீடுமன் = பீஷ்மன்
வீட்சணம் = பார்வைவிழுதல்
வீட்டுதல் = கொல்லுதல், நீக்குதல், அழித்தல்
வீட்டுநெறி = மோட்சவழி
வீணாகானபுரம் = யாழ்ப்பாணம்
வீணாதண்டம் = முதுகெலும்பு
வீணைவல்லோர் = கந்தருவர்
வீதசோகம் = அசோகு
வீதம் = நட்பு, விழுக்காடு, சமாதானம், அளவுமுறை பங்கு, அமைதி, விடப்பட்டது