பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீதராகர்

388

வீற்று வீற்று


  
வீதராகர் = பற்றற்றவர்
வீதல் = கெடுதல், சாதல், நீங்குதல், விடுதல்
வீதி = போதல், அகலம், வரிசை, பிரபை, நேரோடல், விசாலம்
வீதிகோத்திரம் = அக்னி
வீபற்சு = அர்ச்சுனன்
வீமசேனன் = தமயந்தியின் தந்தை, வீமன்
வீமம் = பயங்கரம், பருமன்
வீம்பு = பெருமை
வீரகம் = அலரி
வீரகேயூரம் - இரும்புத் தோளணி
வீரக்கழல் = வீரத்தண்டை
வீரட்டானம் = இறைவன் வீரம் காட்டிய இடம்
வீரதரு = மருது
வீரதை = வீரம்
வீரபத்திரம் = அசுவமேதக் குதிரை
வீரபத்தினி = கண்ணகி
வீரபானம் = யுத்த முடிந்த பின் அருந்தும் பானம்
வீரப்பாடு = வெற்றி
வீரம் = மிளகு, வலி, வேகம்
வீராணம் = பெரும்பறை
வீரி = காளி, துர்க்கை
வீரியம் = சுக்கிலம், வலி, பிரபை, பராக்கிரமம்
வீரை = துன்பம், கடல், வாழை, நெல்லி
வீவு = சாவு, கேடு
வீழி = வீரக்கனி, விழுத்திப்பழம்
வீழ் = விழுது
வீழ்க்கை = ஸ்வாதி நட்சத்திரம்
வீழ்தல் = ஆசைப்படுதல், திரளுதல், விழுதல், நீங்குதல்
வீழ்த்தல் = விழச்செய்தல், வீணாகக்கழித்தல், தாழ இருத்தல்
வீழ்வு = விரும்பல், விழுதல்
வீளை = சத்தம், சீழ்க்கை
வீறு = புண்ணியம், பெருமை, சிறப்பு, பொலிவு, வெற்றி, செழுமை,
பகுப்பு, தனக்கேயுரிய அழகு
வீறுதல் = மேம்படுதல், மிகுதல், கீறுதல், வெட்டுதல்
வீற்றாதல் = பிரிவுபடுதல்
வீற்றிருக்கை = அரசிருக்கை
வீற்றிருத்தல் = இறுமாந்திருத்தல், சிறப்புடன் அமர்ந்திருத்தல், வருத்தம் இன்றி இருத்தல், தனித்திருத்தல்
வீற்று = தனி, வேறுபாடு, கூறு
வீற்றும் = மற்றும்
வீற்று வீற்று = வேறு வேறு