பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெருவு

391

வெறி


  
வெருவு = அச்சம்
வெருளி = செல்வச்செருக்கு, மயக்கமுடையது
வெருளுதல் = மயங்குதல், மருளுதல்
வெருள் = மயக்கம்
வெரூஉ = அச்சம்
வெலவு = வெல்லல்
வெலீஇயோன் = வெல்வித்தோன்
வெல்லுமா = புலி
வெல்வி = வெற்றி
வெவ்வர் = வெம்மை
வெவ்வினை = போர்
வெளி = வெண்பா, புறம், ஆகாயம், வெளியிடம்
வெளிமை = புல்லறிவு
வெளியார் = புல்லறிவாளர், புறம்பானவர்
வெளில் = அணில், தயிர் கடை மத்து, யானைத் தூண், கப்பம்
வெளிறர் = அறிவில்லார்
வெளிறல் = வெண்மையாதல்
வெளிறு = வெண்மை, இளமை, குற்றம், பயன் இன்மை, அறிவின்மை,
புல்லறிவு, அலிமரம், உள்ளிடு இன்மை
வெளிற்றுரை = பொருள் நயமற்ற வார்த்தை
வெள்கல் = வெட்குதல், குலைதல், அஞ்சல்
வெள்ளடை = வெற்றிலை
வெள்ளணி = அலங்காரம், பிறந்தநாள்
வெள்ளணிநாள் = பிறந்தநாள்
வெள்ளம் = நீர், ஈரம், கடல் அலை, நீர்ப்பெருக்கு, கடல், பேரெண், மிகுதி வெள்ளாட்டி = ஏவற்பெண்
வெள்ளாண்மை = உழவு
வெள்ளி = சுக்கிரன், நட்சத்திரம், வெண்மை
வெள்ளிடை = வெளியிடம், ஆகாயம், தெளிவு
வெள்ளிமலை = கைலாயமலை
வெள்ளிலை = வெற்றிலை
வெள்ளில் = பிணப்பாடை, விளாமரம்
வெள்ளை = சங்கு, பலதேவன், புல்லறிவு, புல்லறிவாளன், வெண்பா,
எருதுகள், வெள்ளாடு
வெள்ளைக்கோட்டி = புல்லறிவாளர் சபை
வெள்ளைவாரணன் = ஐராவதமென்னும் யானை மீது வரும் இந்திரன்
வெறி = அச்சம், ஆடு, கலக்கம், கள், பிசாசு, மணம், மருட்சி, வட்டம்,
நோய், மருள், முருகன் பூசையில் மருள் வந்து ஆடுதல், ஒழுங்கு