பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெறிக்குணம்

392

வேசகம்


  
வெறிக்குணம் = மூர்க்கக்குணம், மருள் குணம்
வெறிது = வீண்
வெறித்தல் = ஆவேசமாதல், அஞ்சுதல், மயக்குறல், மணத்தல், கலங்குதல்
வெறிப்பு = மயக்கம், மணம், அச்சம், கலக்கம்
வெறியயர்தல் = மருள் வந்து ஆடல்
வெறுக்கை = பொன், மிகுதிசெல்வம்
வெறுத்தல் = மிகுதல், கோபித்தல், நெருங்கல், செறிதல்
வெறுநுகம் = ஸ்வாதி நட்சத்திரம்
வெறுப்பு = துன்பம், வேண்டாமை, சினம், நெருக்கம்
வெறுமை = அறியாமை, பயன் இன்மை
வெறுவியது = பயனில்லாதது
வெறுவிலி = ஏழை
வெற்பன் = குறிஞ்சி நிலத்தலைவன்
வேற்பு = மலை
வெறிது = வீண்
வெற்றிமயில் = துர்க்கை
வெற்றிலைக்கால் = வெற்றிலைத் தோட்டம்
வெற்றிலைத்தம்பலம் = வெற்றிலை பாக்கு மென்றசாரம்
வெற்றிலைப்படலிகை = வெற்றிலைத் தட்டு
வெற்றுரை = வீண்வார்த்தை
வெற்றெனல் = வெறுமையாதல்
வென் = வெற்றி
வென்றி = வெற்றி
வென்காணல் = வெல்லுதல்
வென்றவர் = முனிவர்
வென்றோன் = அருகன்
வென்னிடுதல் = தோற்றல்

வே


வேகப்புள் = கருடன்
வேகம் = விரைவு, விஷம், கடுமை, பிரவாகம்
வேகடம் = மணியின் அழுக்கை அகற்றல்
வேகர் = தூதர்
வேகவதி = வைகையாறு
வேகித்தல் = விரைதல், கோபித்தல்
வேங்கடம் = திருப்பதிமலை
வேங்கை = புலி, மலர், பொன்
வேசகம் = யானை வால் நுணி