பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேசறவு

393

வேதநீயம்


  
வேசறவு = துக்கம், மனச்சோர்வு
வேசனம் = நகரம்
வேசா = வேசி
வேசாடல் = மனக்கலக்கம்
வேசாறுதல் = ஆறுதல், துக்கம் அடைதல்
வேடு = வேட்டுவன், வரிக்கூத்துள் ஒருவகை
வேடுபறி = வழிப்பறி
வேடை = விருப்பம், வெப்பம், தாகம், காமநோய்
வேட்சை = ஆசை
வேட்கைத்துணைவி = மனைவி
வேட்கோ = குயவன்
வேட்கோவன் = குயவன்
வேட்டகம் = தலைப்பாகை, மாமியார் வீடு
வேட்டம் = வேட்டை, கொலை, விருப்பம்
வேட்டல் = திருமணம் செய்தல், யாகம் செய்தல், விரும்பல், யாகம்,
திருமணம்
வேட்டிதம் = தடை, சூழ்வு
வேட்டுவன் = குளவி, வேடன்
வேட்டை = கொலை, வேட்டம்
வேட்டோன் = கணவன், நண்பன்
வேணகை = மதில்
50
வேணவா = பேராசை
வேணி = ஆகாயம், சடை, யாறு,வெளி, நீர்ப்பெருக்கு, நதி, பின்னியமயிர்
வேணு = மூங்கில், உள்துளை, வில், புல்லாங்குழல்
வேணுகம் = யானையங்குசம்
வேணுபுரம் = சீகாழி
வேணுவனம் = திருநெல்வேலி, திருப்பாசூர்
வேண்டலர் = பகைவர்
வேண்டார் = பகைவர்
வேண்மான் = வேளிர்குல மகன்
வேதகம் = கர்ப்பூரம், நற்சிலை, தானியம், வேறுபடுத்தல், பொன்னாக்கும் பொருள், வேறுபாடு
வேதகாரர் = பிரம்பு வேலைக்காரர்
வேதகிதன் = சிவன்
வேதக்கொடியோன் = துரோணர்
வேதசம் = பிரம்பு
வேதசிரசு = உபநிடதம்
வேதஞ்ஞன் = வேதம் அறிந்தவன்
வேதண்டம் = கைலை மலை, வெள்ளிமலை, மலை
வேதநாயகன் = கடவுள்
வேதநீயம் = அறிதற்பாலது