பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதபாரகர்

394

வேத்திரகரன்


  
வேதபாரகர் = பார்ப்பார், வேதம் அறிந்தவர்
வேதமாதா = காயத்திரி
வேதமார்க்கம் = வைதிகம்
வேதமுடி = வேதாந்தம்
வேதமுதல்வி = பார்வதி, சரஸ்வதி
வேதம் = அறிவு, மறை, சமய முதல் நூல்
வேதவநம் = திருமறைக்காடு
வேதவாணர் = பிராமணர்
வேதவித்தகர் = வேதம் வல்லவர்
வேதவித்து = விஷ்ணு, வேதம் அறிந்தவன்
வேதனம் = சம்பளம், அறிவு
வேதன் = பிரமன்
வேதா = பிரமன்
வேதாகமம் = வேதமும், ஆகமமும்
வேதாங்கம் = சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தசு, சோதிடம்,
வேதக்கருவி நூல்
வேதாதி = பிரணவம்
வேதாத்தியயனம் = வேதம் ஓதல்
வேதாத்திரி = திருக்கழுக்குனறம்
வேதாந்தம் = வேதமுடிவு, அத்துவைதம், உபநிடதம்
வேதாளம் = பூதம், பிசாசு, பெரும்பேய்
வேதாளி = காளி
வேதாளியர் = புகழ்வோர், மங்கல பாடகர்
வேதாளிபாடுவார் = துயில் எழுப்பப் பாடுபவர்
வேதி = ஓமகுண்டம், பண்டிதன், கேட்டைநாள், சடங்குமேடை
வேதிகை = கேடகம், திண்ணை, பலிபீடம், வேறுபடுத்தல்
வேதித்தல் = பேதித்தல், அறிதல், பிளத்தல், வேறாக்கல், தீற்றுதல்
வேதியன் = பிரமன்
வேதினம் = ஈர்வாள்
வேது = வெம்மை, நீராவி
வேதை = துன்பம், துளைத்தல்
வேத்தர் = அறிந்தவர்
வேத்தவை = இராசசபை
வேத்தகன் = அறியத் தக்கவன்
வேத்தன் = அறிந்தவன்
வேத்தியம் = அடையாளம், அறியற்பாலது
வேத்திரகரன் = நந்திதேவன்