பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேத்திரதரன்

395

வேளாண்மை




  
வேத்திரதரன் = வாயிற்காவலன்
வேத்திரம் = பிரம்பு, அம்பு
வேத்திராசனம் = பிரப்பம் பாய்
வேந்தன் = இந்திரன், அரசன், சந்திரன், சூரியன், வியாழன்
வேந்து = அரசன், அரசியல்
வேபனம் = நடுக்கம்
வேபாக்கு = வேகுதல்
வேமம் = நெசவுத்தறி
வேமானியம் = தேவர், விமானத்தில் செல்பவர்
வேம்பன் = பாண்டியன்
வேம்பின்தாரோன் = பாண்டியன்
வேயாமாடம் = சாந்து முதலியன இட்டு மூடிய மாடம், நிலாமுற்றம்
வேயுள் = வீடு, போர்வை
வேய் = மூங்கில, ஒற்றன், உட்டுளை
வேய்தல் = அணிதல், மூடுதல், சூடுதல், சூழ்தல், பதித்தல், பொருந்துதல், மூடுதல்
வேய்வனம் = திருநெல்வேலி
வேய்வை = குற்றம்
வேரம் = சரீரம், கர்ப்பூரம், செய்குன்று, கோபம்
வேரல் = மூங்கில்
வேரி = கள், வாசனை, வெட்டிவேர், தேன்
வேர்த்தல் = கோபித்தல், மனம் புழுங்கல், வியர்வை விடுதல்
வேர்ப்பு = கோபம், வியர்வு
வேர்வு = கோபம்
வேலனாடல் = தேவர்க்காடும் கூத்து
வேலாவலையம் = கடல், பூமி
வேலன் = பூசாரி, முருகன்
வேலாழி = கடல்
வேலி = ஊர், ஐந்துகாணி, நிலம், காவல், மதில், வயல்
வேலிறை = முருகன்
வேலேறு = வேல்பட்டபுண்
வேலை = கடல், காலம், தொழில், பொழுது, கடற்கரை
வேலையிற்றுயின்றோன் = கடலில் உறங்கிய திருமால்
வேவு = ஒற்று, வேதல்
வேழம் = யானை, கரும்பு, முங்கில், இசை, நாணல், விளாம்பழநோய்
வேழம்பம் = வஞ்சகம், ஏளனம்
வேழம்பர் = கழைக் கூத்தாடிகள், கோமாளிகள்
வேளாண்மை = உபகாரம், கொடை, உண்மை, உழவுத் தொழில்