பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைசியவிருத்தி

397

வைராக்கியம்




  
வைசியவிருத்தி = வைசியர் தொழில்
வைசிரவணன் = குபேரன்
வைச்சிரவணன் = இராவணன்
வைசுவதேவம் = ஓமப்பலி, பிதிர்பூசை
வைஷம்மியம் = பகை
வைணுகம் = யானையடக்கும் அங்குசம்
வைதரணி = யமபுர நதி
வைதர்ப்பி = தமயந்தி
வைதவ்வயம் = கைம்மைத்தனம்
வைதனிகன் = கூலிக்காரன்
வைதாலிகன் = உறக்கத்திலிருந்து எழுப்பப் பாட்டுபாடுபவன்
வைதாளி = புகழ்பாட்டு
வைதிகம் = வேதமார்க்கம்
வைதிகர் = வேதநெறி நிற்பவர், வேதமுணர்ந்தவர்
வைதேகி = சீதை
வைத்தியநாதன் = சிவன்
வைத்தூறு = வைக்கோல் போர்
வைநதேயன் = கருடன்
வைந்தவம் = குதிரை
வைபரித்துவம் = விபரீத உணர்வு
வைபவம் = செல்வம், மகிமை
வைபாடிகன் = விகற்ப மொழி பேசுபவன்
வைபோகம் = சந்தோஷம், சீர்மை
வைப்பு = இடம், ஊர், சேமநிதி, புதையல், நிலப்பகுதி, உலகம், சூனியம், செயற்கை
வைப்புத்தலம் = தேவாரத்தில் தனித்தமுறையில் பாடப் பெறாமல் சிற்சில பதிகங்களில் தலத்தின் பெயர்களை மட்டும் குறிப்பிடப்பட்டதலம்
வைமானிகன் = விமானத்தில் செல்பவன்
வையகம், வையம் = பூமி, பல்லக்கு, வைக்கோலால் அமைந்த வீடு, தேர், ஊர்தி, வண்டி, எருது, இடம், புண்ணியத்தலம்
வையாகரணன் = இலக்கணப் பண்டிதன்
வையாபுரி = பழனியில் உள்ள ஒரு குளம்
வையாளிவீதி = குதிரை நடத்தும் தெரு
வையைக்கிழவன் = பாண்டியன்
வைரம் - விரோதம், ஒரு விலையுயர்ந்த கல்
வைராக்கியம் = பற்றின்மை, பிடிவாதம், விடாப்பிடி, நிராசை