பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அத்துவா

403

அரிபிறப்பு


அத்துவா (6) = மந்திரம், வர்ணம், பதம், தத்துவம், புவனம், கலை.


அந்தக்கரணம் (4) = மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.


அந்தணர்தொழில் (6) = ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்.


அரங்கின் எழினி (3) = (நாடக மேடையில், அமைக்கும் திரைச்சீலை,) ஒருமுக எழினி, பருமுக எழினி, கரந்துவரல் எழினி.


அரசர் (3) = சேரன், சோழன், பாண்டியன்.


அரசர்குலம் (3) = சூரிய குலம், (சோழன்) சந்திர குலம், (பாண்டியன்) அக்னிகுலம், (சேரன்)


அரசர்குழு (5) = மந்திரி, புரோகிதன், துாதன், ஒற்றன், சேனாதிபதி, (ஐம்பெருங்குழு.)


அசர்கொடி (3) = வில் கொடி, (சேரன்) புலிக் கொடி, (சோழன்) மீன் கொடி (பாண்டியன்.)


அசர்தானை (6) = தேர், யானை, குதிரை, காலாள், வேல், வாள்.


அரசர்க்குத்துணைவர் (8) = மந்திரிமார், கரும அதிகாரர், சுற்றத்தார், வாயில் காப்பாளர், நகர மாக்கள், படைத்தலைவர், குதிரை வீரர், யானை வீரர், (எண்பேராயம்)


அரசர்க்குரியன (10) = சேனை, குடை, கொடி, முரசு, குதிரை, யானை, தேர், முன் செல்லும் படை, மாலை, செங்கோல்.


அரசர்க்குறுதிச்சுற்றம் (5) = நட்பாளர், அந்தணாளர், சமயல் தொழிலார், மருத்துவக் கலைஞர், சோதிடர்.


அரசர் தொழில் (6) = ஓதல், வேட்டல், ஈதல், உலகைக் காத்தல், படைக்கலம் பயிறல், போர் செய்து பொருளைச் சேர்த்தல்.


அரசர் மாலை (3) = பனம்பூ, (சேரன்) ஆத்திமாலை, (சோழன்) வேம்புமாலை, (பாண்டியன்.)


அரண் (4) = காடு, மலை, நீர், மதில்.


அரிபிறப்பு (15) = சனகன், சனந்தனன், சனாதனன், சனற்குமாரன், நர நாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்ரீவன், தாத்தாதிரேயன்,