பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறம்

405

ஆதாரதேவதைகள்


அறம் (32) = ஆதுலர்க்குச் சாலை, ஐயம், அறுசமயத்தோர்க்குணவு, ஓதுவார்க்கு உண்டி, சேலை, ஏறுவிடுத்தல், காதோலை, பெண்போகம், மகப்பால், மகப்பேறு, மகவளர்த்தல், மருந்து, கொல்லாமை, விலை கொடுத்துயிர் நோய் தீர்த்தல், பிறரிற் காத்தல், கன்னிகாதானம், சோலை, வண்ணார், நாவிதர், சுண்ணம், மடம், குளம், கண் மருந்து, தண்ணீர்ப்பந்தர், தலைக்கெண்ணெய், சிறைச்சோறு, விலங்கிற்குணவு, பசுவுக்கு வாயுறை, அறவைப் பிண மடக்கல், அறவைத் துாரியம், தின்பண்டம நல்கல், ஆவுரிஞ்சுதறி.


அறவகை (3) = ஒழுக்கம், வழக்கு, தண்டம், (வட மொழியில்) ஆசாரம், வியவகாரம், பிராயச்சித்தம்.


ஆகமமார்க்கம் (4) = சன்மார்க்கம், (மாணிக்க வாசகர்) தாசமார்க்கம். (திருநாவுக்கரசர்) புத்திர மார்க்கம், (திருஞான சம்பந்தர்) சகமார்க்கம் (சுந்தரர்).


ஆசிரியர் (2) = ஞானாசிரியர், போதகாசிரியர்.


ஆசிரியர் (3) = உரையாசிரியர், நூலாசிரியர், போதகாசிரியர்.


ஆச்சிரமம் (4) = பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்.


ஆடல்வகை (3) = தாண்டவம், நாட்டியம், நிருத்தம்


ஆடவர்குணம் (4) = அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடித்தல்.


ஆண்பாற்பிள்ளைத் தமிழ்ப் பருவம் (10) = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிறுபறை, சிற்சில் சிதைவு, சிறுதேர் உருட்டல்.


ஆதாரஸ்தலம் (6) = (மூலாதாரம்) திருவாரூர், (சுவாதிட்டானம்) திருவா னைக்கா, (மணிபூரகம்) திருவண்ணாமலை, (அநாகதம்) சிதம்பரம், (விசுத்தி) திருக்காளத்தி, (ஆக்கினை) காசி.


ஆதாரதேவதைகள் (6) = (மூலாதாரம்) விநாயகக் கடவுள், (சுவாதிட்டானம்) பிரமன், (மணிபூரகம்) விஷ்ணு, (அநாகதம்)