பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆதாரம்

406

இசைக்கருவி


உருத்திரன், (விசுத்தி) மகேசுரன், (ஆக்கினை) சதாசிவன்.


ஆதாரம் (6) = மூலாதாரம், (குதம்) சுவாதிட்டானம், (குய்யம்) மணி பூரகம், (நாபி) அநாகதம் (இதயம்) விசுத்தி (அடிநா) ஆக்கினை (நெற்றி).


ஆதித்தன்பிள்ளைகள் (8) = மனு, யமன், சனி,காளிந்தி, சுக்ரீவன், கன்னன், நாரதன், தத்தியன்.


ஆதித்தன்தேவிமார் (2) = உஷாதேவி, சாயாதேவி.


ஆழ்வார்கள் (12) = பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி யாழ்வார், ஆண்டாள்.


ஆன்மதத்துவம் (24) = பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், மெய், வாய், கண், மூக்கு, செவி, சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம், மனம், புத்தி, சித்தம், அகங்காரம், வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்.


ஆன்மா (2) = சீவான்மா, பரமான்மா.


ஆன்மாவகை (3) = விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர்.


இசை (7) = குரல் (மிடறு) துத்தம் (நா) கிளை (அண்ணம்) உழை (சிரம்) இளி (நெற்றி) விளரி, (நெஞ்சு) தாரம் (நாசி) இவற்றிற்கு உரிய ஓசை முறையே மயில், இடபம், ஆடு, கொக்கு, குயில், குதிரை, யானை - சுவை முறையே பால், தேன், கிழான, நெய், ஏலம், வாழை, மாதுளம் - வாசனை முறையே, மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல், பொன்னாவிரை, புன்னை, தேவர் முறையே, விசுவாமித்திரர், அக்கினி, சந்திரன், யமன், சூரியன், கெளதமன், காசிபன்.


இசைக்கரணம் (8) = பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு.


இசைக்கருவி (5) = தோற்கருவி, (முரசு) துளைக் கருவி, (புல்லாங்குழல்)