பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இ




= இந்த
இக = இங்கு
இகத்தல் = கடத்தல், நீங்கல், எல்லை கடத்தல், பிரிதல், பொறுத்தல், மீறுதல், தப்பிப்போதல்
இகபரம் = இம்மை மறுகை
இகம் = இவ்விடம், இம்மை
இகலல் = மாறுபடல்,பகைத்தல், சண்டை செய்தல்
இகலன் = நரி, பகைவன்
இகல் = ஒப்பு, மாறுபாடு, பகை, போர், வலி,அளவு, ஊடல்
இகல்வு = எதிரிடை
இகவு = இகழ்ச்சி
இகழ்ச்சி = மறதி, வெறுப்பு, நிந்தை, குற்றம்
இகளை = வெண்ணெய்
இகனி = வெற்றிலை
இகுசு = மூங்கில்
இகு = வீழ்ச்சி
இகுதல் = சொரிதல்,கரைந்து விழுதல்
இகுதால் = தாழ்ந்து விழுதல்
இகுத்தல் = எறிதல், தாழ்தல், புடைத்தல், அறைதல், வீழ்த்தல், ஒலித்தல், சொரிதல், யாழ் வாசித்தல், சொல்லுதல், இழுத்தல், தொங்க விடுதல், விரித்தல், ஈதல்
இகுப்பம் = திரட்சி, தாழ்வு
இகுவை = வழி
இகுளி = கொன்றை, இடி
இகுளை = தோழி, சுற்றம், நட்பு
இகுள் = இடி
இக்கட்டு = வறுமை, துன்பம், தடை, இடநெருக்கம்
இக்கணம் = இந்த க்ஷணம்
இக்கன் = மன்மதன்
இக்கு = கள், தடை, கரும்பு, தேன்
இங்கண் = இவ்விடம்
இங்கிசை = இம்சை
இங்கிதம் = இனிமை, கருத்து, எண்ணக்குறிப்பு
இங்கு = பெருங்காயம்
இங்குதல் = தங்குதல், அழுந்துதல்
இங்குலிகம் = சிவப்பு
இங்குளி = பெருங்காயம்