பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராசி

408

இழிசொல்


  
குறிஞ்சி, பூபாளம், வேளாவளி, மலகரி, பெளளி, சீராகம், இந்தோளம், பல்லதி, சாவேரி, படமஞ்சரி, தேசி, இல்லிசை, தோடி, வசந்தம், இராமக்கிரியை, வராளி, வைசிகம், மாளவி, நாராயணி, குண்டக் கிரியை, கூர்ச்சரி, பங்காளம், தந்நியாசி, காம்போதி, கெளளி, நாட்டை, தேசாக்கரி, சாரங்கம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சம்காரித்தம், சம்வர்த்தம், காளமுகி, துரோணம், நீல வருணம்.

இராசி (12) = மேடம் (ஆடு), இடபம் (எருது), மிதுனம் (இரட்டை), கர்க்கடகம் (நண்டு), சிங்கம் (சிம்மம்), கன்னி (இளம் பெண்), துலாம் (தராசு), விருச்சிகம் (தேள்), தனுசு (வில்), மகரம் (சுறா), கும்பம் (குடம்), மீனம் (மீன்.)

இராமன் பூசித்த இடம்(5) = சித்தாசிரமம், இராமேஸ்வரம், கதிர்காமம்,
திருமால்பேறு, வாரணாவதம்.

இருமை (2) = இம்மை, மறுமை.

இலக்கணவகை (5) = எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.

இலிங்கம்(5) = பிருதிவி (காஞ்சி), அப்பு (திருவானைக்கா), தேயு (திருவண்ணாமலை), வாயு (சீகாளத்தி), ஆகாயம் (சிதம்பரம்)
(பஞ்சபூதத்தலம்)

இலிங்கவகை(7) = பராத்த லிங்கம் (மகாசங்கரர் காலவரை சான்னித்தியமாய் இருந்து ஆன்மாக்களுக்கு அருள்வது), சுயம்புலிங்கம் (தானே தோன்றியது), காண லிங்கம்,(விநாயகர்,முருகன் முதலானவர் பூசித்த லிங்கம்), தைவிகலிங்கம் (விஷ்ணு முதலான தேவர் பூசித்தது), ஆரிட லிங்கம் (முனிவர் அசுரர் தாபித்துப் பூசித்தது), மானுடலிங்கம் (மனிதர் தாபித்துப் பூசித்தது) க்ஷணிகலிங்கம் (பூசித்தவுடன் விடப்படுவது.)

இல்லறத்தார்சீலம் (5) = கொல்லாமை, திருடாமை, பிறர்மனை நயவாமை,
பொய்கூறாமை, கள்ளுண்ணாமை, (பஞ்சசீலம்.)

இழிசொல் (4) = குறளை, பொய், கடுஞ்சொல்,‌ பயனில்சொல்.