பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எட்டுத்தொகை நூல்கள்

412

கண்ணன் மனைவியர்



எட்டுத்தொகை நூல்கள் (8) = நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானுாறு, புறநானுாறு.


எழினி (3) = ஒருமுக எழினி, பலமுக எழினி, கரந்து வரல் எழினி



ஏறு (3) = அதிகாரநந்தி, திருமால்நந்தி, தருமநந்தி.



ஐங்கணை (5) = தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை, (பஞ்சபாணம்).


ஐசுவர்யம் (8) = இராசாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், அடிமை. (அஷ்ட ஸ்வரியம்)



ஒடம் (4) = கரிமுக அம்பி, பரிமுக அம்பி, தோணி, கப்பல்.



கடல் (7) = உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன்.


கடல்படுதிரவியம் (5) = பவளம், முத்து, சங்கு, உப்பு, ஒக்கோலை.


கடன் (3) = தேவர் கடன், பிதிரர் கடன், முனிவர் கடன்.


கடுகம் (3) = சுக்கு, மிளகு, திப்பிலி.


கடைவள்ளல் (7) = பாரி ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி.


கணம் (18) = அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசிகள், போகபூமியர்.


கணம் (8) = மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சந்திரன், சூரியன், இயமானன்


கண்டம் (9) = பரதகண்டம், குருகண்டம், கிம்புருடகண்டம், இளாவிருத கண்டம், அருவருட கண்டம், கேதுமால கண்டம், இரமிய கண்டம், பத்திராசுவ கண்டம், இரணிய கண்டம், (நவகண்டம்).


கண்ணன் மனைவியர் (8) = உருக்குமணி, இலக்குமணை, சத்தியபாமை, சாம்பவதி, நீளாதேவி, காளிந்தி, மித்திரவிந்தை, பத்திரை